ஏழைகளுக்கு உடையளித்த "Help Dress" அமைப்பினருக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார் - சட்டத்தரணி ஹபீப் றிபான் - News View

Breaking

Post Top Ad

Friday, May 22, 2020

ஏழைகளுக்கு உடையளித்த "Help Dress" அமைப்பினருக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார் - சட்டத்தரணி ஹபீப் றிபான்

கொவிட் - 19 காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு தனது அன்றாட வருமானத்தையும் இழந்துள்ள நிலையிலும் வெளியில் சென்று கொள்வனவினை மேற்கொள்ள முடியாத நிலையிலும் நாம் நோன்பு பெருநாளினை எதிர்நோக்கியுள்ளோம். 

சமூக அக்கறை கொண்டு "Help Dress" எனும் நாமத்தில் எமது இளைஞர் குழுவொன்று ஒன்றுசேர்ந்து ஏழைகளுக்கு உடையளிக்க முன்வந்ததனை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். 

மேலும் இவர்களின் வேண்டுகோளினை ஏற்று தமது பங்களிப்பினை வழங்கிய அனைத்து தனவந்தர்களின் பொருளாதாரமும் மென்மேலும் அபிவிருத்தியடைய இறைவன் துணைசெய்ய வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

மேலும் இவர்களது சேவை அரசியல் பக்கச்சார்பற்றும் மிகச்சிறந்த தேவையுடைய ஏழை மக்களை அடையாளம் கண்டு கொடுக்கப்பட்டதனை காணக்கூடியதாக இருந்தது. எனவே இது போன்ற பல்வேறுபட்ட செயற்பாடுகளை எமது இளைஞர் முன்வந்து ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad