பலமிழந்த நிலையில் உள்ள சுதந்திரக் கட்சி தனக்கு அரசியல் செல்வாக்குள்ளதாக காண்பிக்க முயல்கின்றது - News View

Breaking

Post Top Ad

Friday, May 22, 2020

பலமிழந்த நிலையில் உள்ள சுதந்திரக் கட்சி தனக்கு அரசியல் செல்வாக்குள்ளதாக காண்பிக்க முயல்கின்றது

பலமிழந்த நிலையில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தன்னை பலசாலியாக காண்பிப்பதற்கு முயல்கின்றது என முன்னாள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனக்கு அரசியல் செல்வாக்கு இல்லாத நிலையிலும் அவ்வாறான செல்வாக்கு உள்ளதாக காண்பிப்பதற்கான முட்டாள்தனமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியை அடிப்படையாக வைத்து முடடாள்தனமான தந்திரோபாயங்களை முன்னெடுப்பவர்கள் குறித்து தான் கவலையடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தான் சில மாதங்களிற்கு முன்னரே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு முன்னதாகவே எனக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமை கிடைத்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விடுத்துள்ள அறிவிப்பு அர்த்தமற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சி எனக்கு எதிராக அறிவிப்பு வெளியிட்ட தருணத்தில் நான் கட்சியின் உறுப்பினரேயில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன மற்றும் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடுவதை அடிப்படையாக வைத்தும் எனக்கு எதிரான நடவடிக்கை குறித்து சிந்திக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad