மகனை அழைத்து வர அதிகாரத்தை துஷ்பிரயோகிக்கவில்லை - தவறு என்றால் இப்போதே புறப்படுகிறேன் வணக்கம் : தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் பேஸ்புக் பதிவு - News View

Breaking

Post Top Ad

Thursday, May 7, 2020

மகனை அழைத்து வர அதிகாரத்தை துஷ்பிரயோகிக்கவில்லை - தவறு என்றால் இப்போதே புறப்படுகிறேன் வணக்கம் : தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் பேஸ்புக் பதிவு

தனது மகனை வெளிநாட்டிலிருந்து அழைப்பதற்காக தான் பதவியைச் துஷ்பிரயோகம் செய்யவில்லை எனவும், தந்தை என்ற வகையில் தனது மகனின் கடிதத்தை உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தமை குற்றமென்றால், வணக்கம் எனத் தெரிவித்து தேர்தல் பணியிலிருந்து விலகுவதைத்‌ தவிர வேறு வழியில்லையென, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்தில் பட்டப்படிப்பிற்காக சென்ற நிலையில் கொரோனா காரணமாக நாடு திரும்ப முடியாதிருந்த நிலையில் அவரது மகன், நேற்றையதினம் லண்டன் ஊடாக இலங்கை வந்தடைந்தார்.

அவரது வருகைக்கான விசேட ஏற்பாடுகளை செய்ய ஜனாதிபதியின் உதவியை பெற்றதோடு, அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும் செல்வாக்கைப்‌ பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பில், தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள அவர், தன் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் நீண்ட விளக்கமொன்றை வழங்கியுள்ளார்.

குறித்த பதிவின் மொழிபெயர்ப்பு வருமாறு,

“நெதர்லாந்து அரசாங்கத்தின்‌ புலமைப்பரிசில்‌ ஊடாக, 18 மாத கால முதுகலைப்‌ பட்டப்படிப்புக்காக மகன்‌ சென்றுள்ளார்‌. மார்ச்‌ இறுதிக்‌ காலப்பகுதியில்‌ அது நிறைவடைந்த நிலையில், விமானப்‌ போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டமையால்‌, இலங்கைக்குத்‌ திரும்ப முடியாமல்‌ போய்விட்டது. நீர்ப்பாசனத்‌ திணைக்களப்‌ பொறியியலாளரான எனது மகன்‌, இன்று (நேற்று) 06) அதிகாலை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்‌.

அவருடன் ஒன்றாக இருந்த அரச சேவையிலுள்ள மேலும் 04 பொயிறியியலாளர்களுடன் வரவிருந்த அவர், அதில் ஒருவரின் கல்வி நடவடிக்கை முடியாத நிலையில், அவருடன் 03 பேரே வந்தனர்.

எனது மகனை இலங்கைக்குத்‌ திருப்பியழைப்பதற்காக, ஜனாதிபதியிடம்‌ நான்‌ கோரிக்கை விடுத்தேன்‌ என்றும்‌ அதற்கான விசேட விமானத்தை அனுப்பி வைப்பதற்கான கோரிக்கையை விடுத்தாரா என, மே மாதம் 04ஆம் திகதி காலையில் மூன்று வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் என்னுடைய குடும்ப நண்பரான அரச அதிகாரி ஒருவரிடம் கேட்டதாக அவர் தெரிவித்தார். எனது மகன்‌, மே மாதம் 05ஆம்‌ திகதியன்று அம்ஸ்டர்டேமிலிருந்து லண்டனுக்குப்‌ போய்விட்டார்‌. அங்கிருந்து நாடு திரும்புவாரென சொன்னபோது அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்றையதினம் (06) இணைய பத்திரிகையொன்றின் ஊடகவியலாளர் ஒருவர், எனது மகனின் வருகை தொடர்பில் செய்தியறிக்கையிடுவதற்காக, ஐனாதிபதியிடம்‌ விசேட கோரிக்கையை முன்வைத்தீர்களா, இதற்கென விசேட பயண ஏற்பாடுகளை மேற்கொண்டீர்களா என, என்னிடம்‌ வினவினார்‌.

அத்துடன், எனக்குத் தெரிந்த பல நண்பர்கள் இது தொடர்பில் பேசுவதோடு, ஒரு சிலர் என்னிடம் நேரடியாகவும் இது தொடர்பில் வினவியிருந்தனர்.

எனவே இச்சம்பவத்துடன் தொடர்பான ஒரு சில காரணங்களை கூற விரும்புகிறேன்.

1. அவர்கள் வந்தது, அவர்களுக்கென்ற பிரத்தியேக விமானத்தில் அல்ல. எனக்குத் தெரிந்தவரை, பெரிய பிரிதானியா மற்றும் இங்கிலாந்து உட்பட வட அமெரிக்காவில் உள்ள இலங்கை மாணவர்களும் அரசாங்க அதிகாரிகளும் இங்கிலாந்திற்கு வந்து, அங்கிருந்து பயண வசதிகளைப் பெறக்கூடிய ஏனைய மாணவர்கள் / அதிகாரிகளுக்கும் இவ்வாய்ப்பு கிடைத்திருந்தது.

2. கல்வி நடவடிக்கைகளை நிறைவு செய்து நாட்டுக்கு வர எதிர்பார்த்திருந்த அரசு அலுவலர்களாக, நெதர்லாந்து தூதரகம், இங்கிலாந்து உயர்ஸ்தானிகராலயம் மற்றும் வெளியுறவு அமைச்சு ஆகியவற்றில் அவர்கள் தங்களைப் பதிவு செய்திருந்தனர்.

3. அவர்கள் இலங்கைக்கு திரும்ப வசதி செய்து தருமாறு தூதரகம் ஊடாக நேரடியாக இந்த விஷயத்தை கையாளும் அரசாங்க அதிகாரிகளை தொடர்பு கொண்டு அது தொடர்பான கடிதங்களை வழங்கியிருந்தனர்.

4. எனது தொலைபேசிக்கு கிடைத்த கடிதங்களின் அச்சிடப்பட்ட/ மென்பொருள் பிரதிகளை பிரதமரின் செயலாளர், வெளி விவகார செயலாளர், இலங்கையர்களை மீள அழைப்பதற்கு பொறுப்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஆகியோருக்கு அனுப்பியமை மற்றும் அதனை உறுதி செய்தமை மாத்திரமே இந்த விஷயத்தில் எனது பங்களிப்பாகும். அவர்களை இங்கு கொண்டு வருவதில் ஏதேனும் சிரமங்கள் இருக்கிறதா என்றும் என்னால் இதன்போது கேட்கப்பட்டது. இதற்கிடையில், லண்டனில் ஒரு நாள் தங்க வேண்டியிருந்ததால், வீசா பிரச்சினை மற்றும் விதுரவின் மருத்துவ தேவைகள் தொடர்பில் நெதர்லாந்து தூதுவரை தொடர்பு கொண்டு பேசினேன்.

5. மே 05 ஆம் திகதி இதுபோன்ற கதை பரவுவதாக, கௌரவ ஜனாதிபதிக்கு தெரிவிக்கும் வரை, எனது மகனை நாட்டுக்கு அழைப்பது தொடர்பில் நான் ஜனாதிபதியுடன் நான் ஒருபோதும் விசாரிக்கவில்லை. இருப்பினும், எங்கள் மகனை தங்களின் விசேட உதவியுடன் நாட்டுக்கு அழைத்து வரவுள்ளதாக 04ஆம் திகதியிலிருந்து இவ்வாறானதொரு கதையொன்று பரவி வருகின்றது என, நேற்று (05) தெரிவித்தேன். எனது மகனை அழைத்து வர உதவி வழங்குமாறு அவரிடம் உதவி கேட்காத காரணத்தால், அவரை அழைத்து வருவது தொடர்பில் தான் யாரிடமும் பேசவில்லை என, நான் பேசியபோது பதிலளித்தார்.

6. எனவே, எனது மகன் விதுர தேசப்பிரியவை இலங்கைக்கு அழைக்க, நான் எனது உத்தியோகபூர்வ பதவியை எந்த வகையிலும் முறையற்ற வகையில் பயன்படுத்தவில்லை.

7. இது தொடர்பில் என்னுடன் பேசிய, இது தொடர்பில் எழுதும் நண்பரிடம், எனது மகன் என்பதனால் அவரை இலங்கைக்கு வர அனுமதிக்கக் கூடாதா என்று கேட்டேன். நான் தேர்தல் ஆணைக்குழு தவிசாளர் என்பதால், எனது மகனின் கடிதங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்புவது தனிப்பட்ட வகையில் அனுப்புவது முறையற்றது என்று அவர் கருதுகிறார். அவருக்கு அந்த கருத்தை கொண்டிருப்பதற்கும் அதை பகிருவதற்குமான உரிமையை நான் மதிக்கிறேன்.

8. நான் இவ்வதிகாரிகளிடமிருந்து எந்தவொரு விசேட உதவியையும் கேட்கவில்லை என்பதால், எனது மகனுக்கும், மற்றைய பொது அதிகாரிகளுக்கும், பாடநெறி முடித்து நாட்டுக்கும் திரும்புவதற்கான உரிமை உண்டு என்பதால் நான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் நான் நம்புகிறேன்.

எனது மனைவி,‌ பிள்ளைகளும்‌, எனது பதவிநிலையை அவர்களை அறிமுகப்படுத்துவதற்கு தவறாகப்‌ பயன்படுத்தியதில்லை. பாடசாலையில் பிள்ளைகளைச்‌ சேர்த்துக்கொள்ளவும்‌ கூட பயன்படுத்தியதில்லையென, எம்மைத் தெரிந்தவர்கள் அறிவார்கள்.

ஆயினும் எப்போதும் எம்மை நோக்கி விமர்சனங்களே வந்து சேர்கின்றன.
அவ்வனைத்து விமர்சனங்களையும் பாராட்டுகளாகவே கருத முயற்சிக்கிறோம்.

ஆனால் இவ்விடயத்தை மிகத் தீவிரமாக கருதி, ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைக்கும் நம் சமூக ஆர்வலர்கள் பலர் உள்ளனர். என்ன காரணமோ தெரியவில்லை, தேர்தல் திணைக்களமும் மற்றும் ஆணைக்குழுவும், மக்கள் இறையாண்மை மற்றும் ஜனநாயகம், அம்பலாங்கொடை நகரம் மற்றும் தர்மசோகா கல்லூரி ஆக காணப்படுகின்றது. என்னைப் பொறுத்தவரை, நான் என் வாழ்நாள் முழுவதும் நட்புடனும், எல்லாவற்றிற்கும் மேலாக குடும்ப உறவுகளுடனும் பணியாற்றியுள்ளேன், குறிப்பாக 2010/2011 காலகட்டத்தில் என் மகன் பல நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது, ​​அவரை பகல் வேளையில் பராமரிக்க வேறு யாரும் இல்லாத நேரத்தில் கூட, வைத்தியசாலையில் இருக்காது, நான் எனது கடமையையே செய்து கொண்டிருந்த எனக்கு, நான் தவறாக நினைக்காத ஒன்றைச் செய்ததாக குற்றம் சாட்டப்படுவதில் மகிழ்ச்சி அளிக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி தேர்தலை நடாத்துவதற்கு திகதி குறிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, ஜூன் மாதம் 05ஆம் திகதி எனக்கு 65 வயது பூர்த்தியாகும் நிலையில் அன்றைய தினம் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை, மே மாதம் 05ஆம் திகதி கௌரவ ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கான எனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக, மார்ச்‌ மாதம் முதல்‌ வாரத்தில்‌ அக்கடிதத்தைத்‌ தயாரித்தேன்‌. எனினும்‌, அவ்வாறு செய்யவேண்டாமென எனக்கு நெருக்கமானவர்கள்‌ அறிவுறுத்தினர் என்பதை பலரும் அறிவர்‌. அத்துடன் ஏப்ரல்‌ மாதம் முதல் வாரத்தில்‌, மீண்டுமொரு முறை இராஜினாமா தொடர்பில்‌ கவனம்‌ செலுத்தினேன்‌. அவ்வாறு செய்வது தற்போதைக்கு உசிதமானதல்லவென எமது சிரேஷ்ட உறுப்பினர்களின் கருத்தாக இருந்தது.

அதனைத் தொடர்ந்து அண்மையில், எனக்கெதிராக எமது மற்றுமொரு நண்பரின் உதவியுடன், ஊடகங்களின் ஊடாக பொறுத்துக் கொள்ள முடியாத ஏற்க முடியாத, பொய்யான குற்றச்சாட்டுகள்‌ முன்வைக்கப்பட்ட போது, குழுவாக ஒன்றிணைந்து இருக்க முடியாவிட்டால், என்னால் தொடர்ந்து ஒன்றாக பணியாற்ற முடியாது என தெரிவித்து, நான் இப்பதவியிலிருந்து விலகும் யோசனையை ஏப்ரல் மாதம் கடைசியிலும் மே மாதம் முதல் வாரத்தின் வார இறுதியிலும் நான் எனது சகாக்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தேன்.

எனவே நண்பர்களே. அரசியல் செயற்பாட்டாளர்களே, சிவில் சமூக செயற்பாட்டாளர்களே, ஊடகவியலாளர்களே,

நான் எப்போதும் கூறுவது போன்று நாம், நீதிமன்றத்திலும், கணக்காய்விலும் மனச்சாட்சிக்கு விரோதமின்றி செயற்பட வேண்டும். எனது இந்த நடவடிக்கை, எந்தவொரு வகையிலும் தவறானது என நான் எண்ணவில்லை.

நான் ஏற்கனவே சொன்னது போன்று, என்னுடைய மகன்‌ அனுப்பி வைத்த கடிதங்களை, அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தமை, அது தொடர்பில்‌ அவர்களிடம் விசாரித்தமை ஆனது, தேர்தல்கள்‌ ஆணைக்குழுவின்‌ தவிசாளர்‌ என்ற வகையில்‌ நான் செய்யக்கூடாத காரியமாயின்‌, உங்கள் அனைவருக்கும் வணக்கம்‌ கூறிவிட்டு, தேர்தல்‌ கடமைகளில்‌ இருந்து விலகுவதைத்‌ தவிர வேறு வழியில்லையென நான் நினைக்கின்றேன்‌.

கொவிட் 19 இற்கு தோல்வி - மக்களுக்கு ஜனநாயகம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
,අධ්‍යයන කටයුතු සදහා විදේශගතව සිටි මගේ පුත්‍රයා වන විදුර කාශ්‍යප දේශප්‍රිය ශ්‍රී ලංකාවට ගෙන්වා ගැනීම සදහා මගේ නිලතත්වය භාවිතා කර මා අයුතු බලපෑමක් කර තිබේ යනුවෙන් මට චෝදනාවක් එල්ල කර තිබේ . ඒ පිළිබඳව සමාජ මාඨ්‍ය වල සංසරණය වන ලිපියකට ( කලම්බු ටෙලිඟ්‍රාෆ් ) පෝස්ටුවකට මා ලියූ සටහන පහත අලවමි.

#### නෙදර්ලන්ත රාජ්‍ය ශිෂ්‍යත්වයක් මත මාස 18 ක පශ්චාත් උපාධි පාඨමාලාවක් හදාරා එය මාර්තු මස අග අවසන් වීමෙන් පසු , ගුවන් ගමන් අත්හිටුවීම නිසා ශ්‍රී ලංකාවට පැමීණීමට නොහැකිව සිටි වාරිමාර්ග දෙපාර්තමේන්තුවේ ඉංජිනේරුවකුවූ මාගේ පුත්‍රයා විදුර කාශ්‍යප දේශප්‍රිය අද 2020 මැයි 06 දින අලුයම කටුනායකට පැමිණි ශ්‍රී ලංකන් ගුවන් යානයෙන් ලංකාවට පැමිණියේය.

ඔහු සමග එකට සිටි තවත් රජයේ සේවයේ නියුතු ඉංජිනේරුවන් සිවුදෙනකු ඒ සමග පැමිණීමට අපේක්ෂා කළද ඉන් අයකුගේ අධ්‍යයන කටයුත අවසන් නොවීම නිසා ඔහු සමග නෙදර්ලන්තයේ සිට පැමිණියේ තවත් ඉංජිනේරුවන් තිදෙනකු පමණි.

මාගේ පුත්‍රයා ලංකාවට ගෙන්වා ගැනීම සදහා මවිසින් ගරු ජනාධිපතිවරයා වෙත ඉල්ලීමක් ඉදිරිපත් කර විශේෂ යානයක් වෙන් කරවා ගෙන තිබේ දැයි මැයි 04 දින පෙරවරුවේ , පුද්ගලයින් තිදෙනකු වෙන වෙනම අවස්ථා තුනකදී අපගේ පවුලේ මිතුරකු වූ රජයේ නිලධරයකු ගෙන් විමසූ බව ,විදුර 05 දා ඇම්ස්ටර්ඩෑම් හි සිට ලන්ඩන් වෙත ගොස් එහි සිට මෙහි පැමිණෙන බව මා විසින් ඔහුට දැන්වූ විට මා සමග ප්‍රකාශ කළේය.

එමෙන්ම අද දින ඉ- පුවත්පතක මාධ්‍යවේදියකු , මාගේ පුත්‍රයාගේ පැමිණීම ගැන ලිපියක් ප්‍රසිද්ධ කිරීමට අපේක්ෂා කළ විටදී එය පල කිරීමට පෙර ඒ ගැන මා විමසීම මැනවි යයි මේ සටහන ලියන මාගේ මිතුරා ඔහුට දන්වනුු ලදුව ලිපිය සැකසීමට අපේක්ෂිත එම මාධ්‍යවේදී මහතා විසින් ඒ හා සබැදි කරුණු මගෙන් ඉ- තැපැල් ලිපියකින් විමසන ලදී මගේ පුත්‍රයා ලංකාවට ගෙන්වා ගැනීම සම්බන්ධයෙන් මා ගරු ජනාධිපතිවරයා වෙතින් යම් ඉල්ලීමක් කළේද යන්න සහ ඒවෙනුවෙන් විශේෂ ගමනක් සංවිධානය වූයේද යන්න එයින් විමසා තිබිණි . මම එයට පිළිතුරු දුනිමි.

එමෙන්ම මා දන්නා හඳුනන සැලකිය යුතු මිතුරන් සංඛ්‍යාවක් ද මේ ගැන සාකච්ඡා කරන බව, ඉන් සමහර දෙනකු සෘජුවම මගෙන් මේ ගැන විමසන හෙයින් නිරීක්ෂණය වේ.

එහෙයින් මේ සිද්ධියට අදාළ කරුණු මතු සදහන් කරමි.

1. , ඔවුන් පැමිණෙන්නේ ඔවුන් සඳහාම විශේෂයෙන් යොදවන ලද යානයක නොවේ . මා දන්නා පරිදි එංගලන්තය ද ඇතුළු මහා බ්‍රිතාන්‍යයේ සහ උතුරු ඇමෙරිකාවේ ශ්‍රී ලංකාා ශිෂ්‍යයන් හා රාාජ්‍ය නිලධාරීන් ද එංගලන්තයට පැමිණ එමගින් ගමන් පහසුකම් ලබා ගත හැකි සෙසු ශිෂ්‍ය / නිලධාරීන්ටද එමගින් අවස්ථාව ලබා ගත හැකිව තිබුණි.

2. අධ්‍යායන කටයුතු අවසන්වී දිවයිනට පැමිණීමට අපේක්ෂිත රාජ්‍ය නිලධාරීන් ලෙස ඔවුන් නෙදර්ලන්තයේ තානාපති කාර්යාලයේ හා එංගලන්තයේ මහ කොමසාරිස් කාර්යාලයේද විදේශ කටයුතු අමාත්‍යාංශයේද ලියාපදිංචි වී තිබිණි.

3. ඔවුනට ලංකාවට පැමිණීම සදහා පහසුකම් සලසා දෙන ලෙස තානාපති කාර්යාලය හරහා ද සෘජුවද මේ පිළිබඳව කටයුුතු කරන රාජ්‍ය නිලධාරීන්ට අමතා ඔවුන් විසින් ලිපි කිහිපයක්ම ඉදිරිපත් කරන ලදී.

4., මේ සම්බන්ධයෙන් මාගේ මැදිහත්වීම වූයේ මාගේ දුරකථනයට ලද ලිපිවල මුද්‍රිත පිටපත් / මෘදු පිටපත් අදාළ පරිදි අග්‍රාමාත්‍ය ලේකම් , විදේශ කටයුතු ලේකම් , විදේශගත ශ්‍රී ලාංකිකයන් ආපසු ගෙන්වා ගැනීමේ මෙහෙයුම බාර ජනාධිපති අතිරේක ලේකම් යනාදී නිලධාරීන් වෙත යැවීම හා එ්වා ලද බව සනාථ කරගැනීමයි එමෙන්ම මොවුන් ගෙන්වා ගැනීමට අපහසුතා තිබේද යන්න ද මවිසින් විමසන ලදී.

ඒ අතරතුර ලන්ඩන් හි දවසක් රැඳී සිටීමට සිදුවන්නේ නම් වීසා ලබා ගැනීමට අදාළ ගැටලුවක් පිළිබඳව හා විදුරගේ ඔෟෂධ අවශ්‍යතා ගැන නෙදර්ලන්ත තානාපතිවරයටද මම කතා කළෙමි.

5. මැයි 05 දිනයේදී ⁣ මා , ගරු ජනාධිපතිවරයා ට මෙවැනි කතාවක් පැතිරෙන බව දන්වන තෙක් මාගේ පුත්‍රයා ආපසු ගෙන්වා ගැනීම ගැන මා කිසිවිටෙක ගරු ජනාධිපතිවරයා සමග සාකච්ඡා කර නැති අතර එතුමාද මේ ගැන විමසා නැත . එසේවුවද මාවිසින් එතුමාගේ විශේෂ සහායක් ලබා ගෙන අපගේ පුත්‍රයා ගෙන්වා ගන්නා බවට 04 දා සිට කතාවක් පැතිරෙන බව එතුමාට ඊයේ මැයි 05 දැන්වීමි . මාගේ පුත්‍රයා ගෙන්වා ගැනීම සදහා සහාය ලබාදෙන ලෙස එතුමාට මා ඉල්ලීමක් නොකළ හෙයින් එතුමා කිසිවෙකුට ඔහු ගෙන්වා ගැනීම ගැන ⁣කතා නොකළ බවද මාගේ විමසුමට පිළිතුරු ලෙස එම සාකච්ඡාවේදී එතුමා දැන්වීය.

6 . එබැවින් මාගේ නිල තත්වය භාවිතා කර මාගේ පුත්‍රයා වූ විදුර ⁣දේශප්‍රිය ගෙන්වා ගැනීමට මා කිසිදු අයුතු බලපෑමක් කර නැත.

7. මේ ගැන මා සමග කතා කළ මේ සටහන ලියන මිතුරාගෙන් , මා විමසූයේ මාගේ පුත්‍රයා වීම නිසා ඔහුට ලංකාවට පැමිණීමට අවස්ථාව ලබා නොගතයුතුද යන්න හා මා මැකොස සභාපති නිසා , මාගේ පුත්‍රයාගේ ලිපි අදාළ නිලධාරීන්ට පෞද්ගලික මට්ටමින් යැවීමෙන් මා වරදක් කර තිබේද යන්නයි . ⁣අදාළ ලිපි ඒ නිලධාරීන්ට යැවීම අයෝග්‍ය බව හා එය ළ බැදියා අතර ගැටුමක් බව ඔහු ගේ මතයයි . ඔහුට ඒ මතය දැරීමට හා එය ප්‍රසිද්ධ කිරීමට ඇති අයිතියට ගරු කරමි.

8. මා මේ නිලධාරීන් වෙතින් කිසිදු විශේෂ උදව්වක් ඉල්ලා නැති හෙයින් හා මාගේ පුත්‍රයාටද සෙසු රාජ්‍ය නිලධාරීන්ට මෙන්ම පාඨමාලා අවසන්වූ පසු දිවයිනට පැමිණීමට අයිතිය අැති බැවින් මා වරදක් කර නැති බව මම විශ්වාස කරමි . මාගේ දරුවන් හෝ බිරිඳ කිසිවිටක මාගේ නිල තත්වය , ඔවුන් හඳුන්වා දීමට හෝ භාවිතා නොකරන බව හෝ දරුවන් පාසැල්වලට ඇතුළත් කිරීම සදහා හෝ භාවිතා කර නැති අප ගැන දන්නා සැවොම දනිති.

එසේවුවද සැමවිටම අපට අවලාද හා විවේචන එල්ලවේ

ඒ සෑම අවලාදයක්ම ප්‍රශංසා මෙන්ම එකම ආකාරයෙන් සැලකීමට උත්සාහ කරමින් සිටිමි .##!##

එනමුත් මේ කරුණ බරපතල ලෙස සලකා යම් ක්‍රියා මාර්ගයක් ගත යුතුව තිබේ යයි සිතන අපේ සමාජ ක්‍රියාකාරීහු රැසක් සිටිති එහෙයින් මේ ගැන යමක් කළයුතු යයි සිතමි. මක්නිසාද යත් මැතිවරණ දෙපාර්තමේන්තුව හා කොමිසමද ජනතා පරමාධිපත්‍යය හා ප්‍රජාතන්ත්‍රවාදයද අම්බලන්ගොඩ නගරය හා ධර්මාශෝක විද්‍යාලයද . මිත්‍රත්වය ද පවුලේ සබඳතා වලට වඩා ඉහළින් සලකමින් මුලු දිවිය පුරාම කටයුතු කළ මට , විශේෂයෙන්ම පුත්‍රයා 2010/2011 වර්ෂවල බරපතල ලෙස රෝගාතුරව දින ගණනාවක් රෝහල් ගතව සිටියදී ඔහුගේ සාත්තුව සදහා දිවා කාලයේ යෙදවීමට අන් කිසිවකු නොමැතිව සිටියදී පවා රෝහලේ රැදී නොසිට රාජකාරි ඉටු කළ මට ඔහු වෙනුවෙන් , මා වරදක් සේ නොසිතූ කාර්යයක් ඉටු කර චෝදනාවකට ලක්වීම සතුටට කරුණක් බැවිනි.

පසුගිය අප්රේල් 25 දින ඡන්දවිමසීම පැවැත්වීමට නියම කළ වහාම මට වයස අවුදු 65 සම්පූර්ණ වන 2020 ජුනි 05 දින සභාපති ධුරයෙන් ඉවත්වීමේ ලිපිය මැයි 05 දා ගරු ජනාධිපතිවරයා වෙත යැවීමට මාර්තු මුල් සතියේ මා සකස් කළ බවත් එසේ නොකරන ලෙස මාගේ සමීපතයන් ඉල්ලා සිටි බවත් දන්නා සැලකිය යුතු පිරිසක් සිටිති . එමෙන්ම අප්රේල් මස මුලදීද මා ඒ යෝජනාව ගැන නැවත අවධානය යොමු කළ අතර එසේ කිරීම සුදුසු නැති බව අපගේ ජේෂ්ඨ නිලධාරීන්ගේ මතය විය ඉන් අනතුරුව ව මට එරෙහිව දරා ගැනීමට බැරි තරම් අභූත චෝදනා අපගේ තවත් මිතුරකුගේ සහාය ඇතිව මෑතදී, මාධ්‍ය හරහා ප්‍රචාරය වන අවස්ථාවේදීද කණ්ඩායමක් සේ එකට සිටිය නොහැකි නම් මට තවදුරටත් එකට වැඩ කළ නොහැකි බව දන්වා මම මේ තනතුරෙන් ඉවත්වීමේ යෝජනාව ගැන අප්රේල් අගද මැයි පළමු සති අන්තයේද මා අපගේ සගයන් හා නිලධාරීන් සමග සාකච්ඡා කර තිබේ.

එබැවින් මිතුරනි , දේශපාලන ක්‍රියාකාරීනි , සිවිල් සමාජ ක්‍රියාකාරීනි , මාධ්‍යවේදීනි, පුරවැසියනි ,

මා සැමවිටම ප්‍රකාශ කරන පරිදි අපි අධිකරණය , විගණනය හා හෘදය සාක්ෂිය ඉදිරියේ වරද කරුවකු නොවනසේ ක්‍රියා කළ යුතු වෙමු . මාගේ මෙම කාර්යය ඒකිසිදු අයුරකින් වරදක් නෙවේ යයි මම සිතමි.

එසේවුවද මා , අපගේ පුත්‍රයා විසින් එවන ලද පෙර කී ලිපි නිලධාරීන් වෙත ඉදිරිපත් කිරීමෙන් හා ඒ ගැන ඔවුන් විමසීමෙන් කර ඇත්තේ , මැකොස සභාපති ලෙස මා නොකළ යුත්තක් නම් ඔබ සැමට ආයුබෝවන් යනුවෙන් පවසා දැන් මැතිවරණ මෙහෙයුම් රාජකාරි වලින් පසෙකට වීම හැර වෙනත් විකල්පයක් නැතැයි හඟිමි.

කෝවිඩ් 19 ට පරාජය .- ජනතාවට ප්‍රජාතන්ත්‍රවාදය හිමිවනු ඇතැයි පතමි.

No comments:

Post a Comment

Post Bottom Ad