விவசாயப்புரட்சி என்று சொன்னால் மாத்திரம் போதாது விவசாயிகளையும் கவனிக்க வேண்டும் : முன்னாள் சபாநாயகர் கரு - News View

About Us

About Us

Breaking

Monday, May 18, 2020

விவசாயப்புரட்சி என்று சொன்னால் மாத்திரம் போதாது விவசாயிகளையும் கவனிக்க வேண்டும் : முன்னாள் சபாநாயகர் கரு

(நா.தனுஜா) 

அரசாங்கம் 'விவசாயப்புரட்சி' ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பில் சிந்திக்கும் அதேவேளை, விவசாயிகளுக்குத் தேவையான வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான கொள்கை ரீதியான நடவடிக்கைகளை முதலில் மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியிருக்கிறார். 

இது குறித்து கரு ஜயசூரிய தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது தற்போதைய சூழ்நிலையில் மீண்டும் ஊக்குவித்து, விவசாயப்புரட்சி ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பில் சிந்திக்கும் அதேவேளை, விவசாயிகளுக்குத் தேவையான வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான கொள்கை ரீதியான நடவடிக்கைகள் அவசியமாகும். 

விவசாயத்திற்கு அவசியமான நீர், உரம், கிருமிநாசினி போன்றவை நியாயமான விலைகளில் கிடைக்காவிட்டால் விவசாய உற்பத்திகளின் அளவும் குறைவடையும். எனவே இந்த அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று சுட்டிகாட்டியிருக்கிறார்.

No comments:

Post a Comment