கொரோணாவின் அச்சுறுத்தலில் இருந்து மாத்திரமன்றி, முஸ்லிம்களுக்கெதிரான அனைத்து சதிகளிலிருந்தும் பாதுகாப்புத் தேடி பிராத்திப்போம் - News View

Breaking

Post Top Ad

Saturday, May 23, 2020

கொரோணாவின் அச்சுறுத்தலில் இருந்து மாத்திரமன்றி, முஸ்லிம்களுக்கெதிரான அனைத்து சதிகளிலிருந்தும் பாதுகாப்புத் தேடி பிராத்திப்போம்

இலங்கையிலும், உலக நாடுகளிலும் பரந்து வாழும் எமது முஸ்லிம் உறவுகளுக்கு புனித “ஈதுல் பிர்த்” நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதோடு, கொவிட் 19 வைரஸின் தாக்கத்திலிருந்து அனைவரும் அவசரமாக இயல்பு வாழ்வுக்கு திரும்ப இப்புனித பெருநாளில் இருகரமேந்திப் பிரார்த்திப்போம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

ஈதுல் பிர்த் நோன்புப் பெருநாளை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இம்முறை நெருக்கடியான சூழலில் நோன்புப் பெருநாளை கொண்டாட இருக்கின்றோம். என்ற உணர்வுடன் நாட்டினதும், நாட்டு மக்களினதும் பாதுகாப்புக்காக வழங்கப்படுகின்ற அனைத்து வழிகாட்டல்களையும் உரிய முறையில் பேணி இப்பெருநாளில் நடந்து கொள்ள வேண்டும்.

கொவிட் 19 வைரஸின் அச்சத்தில் மத்தியில் நோன்பு நோற்று இறைபக்தியுடன் நல்ல சிந்தனைகள் ஊற்றெடுக்கின்ற இப்புனித நாளில் சமூகத்தின் விடுதலைக்காகவும், எழுச்சிக்காகவும் கொள்கை ரீதியாக ஒன்றிணைய திடசங்கற்பம் பூணுவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சோதனையின் உச்சம், தொழுகைக்காக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பள்ளிவாசலுக்கு செல்வதிலிருந்து தடுக்கப்பட்டிருக்கின்றோம். அவ்வாறே இப் பெருநாள் தொழுகைக்கூட தத்தங்களின் இல்லங்களிலேயே மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றோம்.

வீடுகளில் தொழுதுகொண்டு அமைதியாகவும் பொறுமையாகவும் இத்தியாகத் திருநாளை கொண்டாடுவோம். “கொரோணா”வின் அச்சுறுத்தலில் இருந்து மாத்திரமன்றி, முஸ்லிம்களுக்கெதிரான அனைத்து சதிகளிலிருந்தும் பாதுகாப்புத் தேடி பிராத்திப்போமாக.

அனைத்து உள்ளங்களுக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad