கொரோனாவிலிருந்து விடுபட்டு, அச்சமின்றி நிம்மதியாக வாழ்வதற்கு சகலரும் இப்புனிதமான தினத்தில் பிரார்த்திப்போம் - முன்னாள் அமைச்சர் சுபைர் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 23, 2020

கொரோனாவிலிருந்து விடுபட்டு, அச்சமின்றி நிம்மதியாக வாழ்வதற்கு சகலரும் இப்புனிதமான தினத்தில் பிரார்த்திப்போம் - முன்னாள் அமைச்சர் சுபைர்

முழு உலகையும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கி, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுகொண்ட கொரோனா வைரசிலிருந்து விடுபட்டு, அச்சமின்றி நிம்மதியாக வாழ்வதற்கும், உலகில் சமாதானம் ஏற்படுவதற்கும் சகலரும் இப்புனிதமான பெருநாள் தினத்தில், இரு கரமேந்தி இறைவனிடத்தில் பிரார்த்திப்போம் என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில், புனித ரமழான் மாதத்தில் இறையச்சத்துடன் நோன்பு நோற்று, ஆன்மீக மேம்பாட்டிக்காக வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட்டு, ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடி மகிழும், அனைத்து இஸ்லாமியச் சகோதரர்களுக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில், பெருமகிழ்ச்சியும், மனநிறைவும் அடைகின்றேன். “அல்ஹம்துலில்லாஹ்”

Covid 19 கொடிய வைரஸானது உலகலாவிய ரீதியில் வாழும் மக்களுடைய அன்றாட செயற்பாடுகளை முடக்கி, பெரும் இழப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளது. இன்னும் பல நாடுகள் அதிலிருந்து மீள முடியாமல் உள்ளது. அந்த வகையில் அதன் தாக்கத்திலிருந்தும், அபாயத்தில் இருந்தும் எமது நாடும் இன்னும் விடுபடவில்லை. குறித்த தொற்று நோயினை கட்டுப்படுத்தி நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் வேலைத்திட்டங்கள் பாராட்டத்தக்கது.

குறிப்பாக, covid 19 தொற்று நோயினால் நிர்க்கதிக்குள்ளாகி, இன்றும் வீடுகளுக்குள் முடக்கப்பட்டு, பொருளாதார ரீதியாக கஷ்டப்படுகின்ற மக்களுக்கு நிம்மதியான வாழ்வு மலர்வதற்கும், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வாழும் முஸ்லிம் சமூகம் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் இப்பெருநாள் தினத்தைக் கொண்டாடி மகிழ இப்புனிதத் திருநாளில் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

கொரோனா அச்சம் தொடர்ந்தும் காணப்படுவதால் எமது பெருநாள் தினத்தினை மிகவும் சிறப்பாக, கொண்டாடி மகிழ்வதற்கு இக்காலகட்டம் பொருத்தமில்லை. எனவே நாமும் சமூக இடைவெளிகளைப் பேணி, விழிப்பாகவும் அவதானமாகவும் செயற்பட வேண்டும். இருந்தாலும், தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, இஸ்லாமியர்களாகிய நாம் அமைதியாகவும் பொறுமையுடனும் செயற்பட்டு, தத்தமது வீடுகளில் இருந்தவாறு இப்பெருநாள் தினத்தினை கொண்டாடுவது பெரும் பாதுகாப்பாகும்.

குறிப்பாக, எமது நாட்டிலே வாழும் ஏனைய சமூகங்கள் அவர்களுடைய சந்தோசமான பெருநாள் தினங்களை எவ்வாறு வீடுகளில் இருந்து கொண்டாடினார்களோ, நாமும் அதே முறையைக் கையாண்டு, நாட்டினுடைய சட்டதிட்டங்கங்களை மதித்து, ஜம்இய்யதுல் உலமா மற்றும் வக்பு சபை போன்றவற்றின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களை பின்பற்றி இஸ்லாமிய மார்க்கம் காட்டிய அழகிய வழியில் எமது பெருநாள் தினத்தினை கழிப்போமானால் நிச்சயமாக இறைவனுடைய உதவி எமக்குக்கிடைக்கும்.

மலர்ந்திருக்கும் இந்த ஈகைத் திருநாளில் பல்லின சமூகத்தில் வாழும் நாம் தற்போதைய சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு, சகோதர சமூகத்திற்கு இடையூறுகள் ஏற்படாத வண்ணம் எமது பெருநாள் தினத்தினை கழிக்க வேண்டும். அத்துடன் நாம் முன்மாதிரியான சமூகம் என்பதை நிரூபித்து, நமது அன்றாட செயற்பாடுகளை உளத்தூய்மையோடும் அல்லாஹ்வின் அருளுக்குரியதாகவும், ஆக்கிக்கொள்ள வேண்டும்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் காட்டிய அழகிய வழிமுறையில் இப்பொருநாள் தினத்தை நாம் அனைவரும் கொண்டாடி மகிழ வேண்டும் எனவும் அவர் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment