கொரோனா தொற்றுக்குள்ளானோரின் தொகையை மறைக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 5, 2020

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் தொகையை மறைக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது

(இராஜதுரை ஹஷான்) 

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையை மறைக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. சுகாதார பாதுகாப்பு தரப்பினரது கண்காணிப்புக்கு அமையவே அரசாங்கம் தற்போது செயற்படுகின்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கையை அரசாங்கம் மறைப்பதாக எதிர்தரப்பினர் குற்றம் சுமத்துகின்றார்கள். வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையை குறைத்து அறிவிக்க வேண்டும். என்ற அவசியம் அரசாங்கத்துக்கு கிடையாது. 

சுகாதார பாதுகாப்பு தரப்பினரது ஆலோசனைக்கு அமையவே அரசாங்கம் தற்போது செயற்படுகின்றது. எதிர்தரப்பு அரசியல் நோக்கங்களை கருத்திற் கொண்டு செயற்படுகின்றது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad