பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் அறிவித்தல் - News View

Breaking

Post Top Ad

Monday, May 18, 2020

பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் அறிவித்தல்

பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களின் விண்ணப்பப்படிவங்களை உறுதிப்படுத்துவதற்காக 3 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களில் இணைவதற்கான விண்ணப்பப்படிவங்களை மே மாதம் 20, 21, 22 ஆகிய தினங்களில் உறுதிப்படுத்த முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.

கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை, அதிபர் ஊடாக உறுதிப்படுத்துவதற்கு எதிர்வரும் புதன்கிழமை (20) முதல் 3 நாட்களுக்கு மேற்கொள்வதற்கான வசதிகளை மேற்கொள்ளுமாறு, அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்களுக்கு கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

இதற்கு முன்னர் இரு தடவைகள் இக்கால எல்லை நீடிக்கப்பட்ட நிலையில் தற்போது இதற்கான புதிய தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தற்போது காணப்படும் நிலைமைகளை கருத்திற்கொண்டு, சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமைய, சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றி, குறித்த பாடசாலையின் அதிபர் அல்லது உதவி அதிபரினால், தமது பாடசாலையில் உயர் தரத்தில் சித்தியடைந்து, பல்கலைக்கு தகுதி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை உறுதிப்படுத்த வேண்டும் என, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad