வீடுகள், அறைகளில் தங்கியிருப்போரிடம் வாடகை அறவிடுதல் குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 6, 2020

வீடுகள், அறைகளில் தங்கியிருப்போரிடம் வாடகை அறவிடுதல் குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு

(ஆர்.யசி) 

கொழும்பு உள்ளிட்ட நகர்பகுதிகளில் வாடகை வீடுகள், அறைகளில் தங்கியிருப்போரின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு அவர்களின் மாத வாடகையை அறவிடும் விடயத்தில் மனிதாபிமான அடிப்படையில் நடந்துகொள்ளுமாறு அரசாங்கம் வீட்டு உரிமையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் இக்கால கட்டத்தில் மாத வாடகைகளை அறவிடுவதை தவிர்க்குமாறும் அல்லது வாடகையில் ஒரு பகுதியை மாத்திரம் அறிவிடுமாறும் அரசாங்கம் அவர்களை கேட்டுக் கொண்டுள்ளது. 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், அமைச்சரவையில் மக்களுக்கு விசேட கோரிக்கையொன்றை விடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதாவது கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் பல்கலைக்கழங்கள் செல்வோர் மற்றும் தொழிலுக்கு செல்வோர் அதிகமாக வாடகை அறைகளிலேயே தங்கியிருக்கின்றனர். 

தற்போதைய நிலைமையில் பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இவ்வாறான நிலைமையில் அறை மற்றும் வீட்டு உரிமையாளர்கள் மாத வாடகை பணம் கேட்கலாம். ஆனால் இது அவர்களின் வருமானம் என்றாலும் தற்போதைய நிலைமையில் இந்த விடயத்தில் அவர்கள் மனிதாபிமான அடிப்படையில் நடக்க வேண்டும். 

சில இடங்களில் அதில் இருந்தவர்கள் தமது வீடுகளுக்கு சென்றிருந்தால் அந்த அறைகளில் இல்லாத நிலையிலும் வாடகை கேட்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அனால் இதில் மானிதாபினமான அடிப்படையில் வாடகையில் ஒரு பகுதியை மாத்திரம் அறவிடுமாறும் அரசாங்கம் கோரிக்கை விடுப்பதாக அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad