சிகையலங்கார, அழகுக்கலை தொழில் புரியும் 650 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 20, 2020

சிகையலங்கார, அழகுக்கலை தொழில் புரியும் 650 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சிகையலங்கார மற்றும் அழகுக்கலை நிலைய தொழில் புரிபவர்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், மட்டக்களப்பில் இயங்கி வரும் அம்கோர் நிறுவனத்தினால் ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலகப் பிரிவில் சிகையலங்கார தொழில் புரிபவர்களுக்கு உலருணவுப் பொதிகள் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜீத், உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அப்கர், அம்கோர் நிறுவனத்தின் சிரேஸ்ட நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் யோ.சிவயோகராஜன், கள உத்தியோகத்தர் எஸ்.தர்சன், செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சிகையலங்கார தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சிகையலங்கார நிலைய தொழில் புரியும் 500 குடும்பங்களுக்கும், அழகுக்கலை நிலையத் தொழில் புரியும் 150 குடும்பங்களுக்குமாக 650 குடும்பங்களுக்காக சுமார் 7 இலட்சத்தி 2 ஆயிரம் ரூபா பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக அம்கோர் நிறுவனத்தின் சிரேஸ்ட நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் யோ.சிவயோகராஜன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினைத்தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலை நிலைய தொழில் புரிபவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் வேண்டுகோளில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் வழிகாட்டலில் மாவட்டத்தின் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் செயற்படுகின்ற தொழிலாளர்களுக்கு அம்கோர் நிறுவனத்தினால் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad