மாங்கேணி தோட்ட விவசாயிகளுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 20, 2020

மாங்கேணி தோட்ட விவசாயிகளுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

எஸ்.எம்.எம்.முர்ஷித்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மாங்கேணி தோட்ட விவசாயிகளுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

அந்த வகையில், மாங்கேணி பிரதேசத்துக்குட்பட்ட பசுமைக்கிராம விவசாயிகளின் கோரிக்கைக்கமைய முதற்கட்டமாக ஐம்பது (50) விவசாயக் குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள் செவ்வாய்க்கிழமை மாலை வழங்கி வைக்கப்பட்டன.

வாழைச்சேனை, கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினரும் சமூக சேவையாளருமான க.கமலநேசனின் பிரதேச சபை மாதாந்த வேதனமும் தனது தனிப்பட்ட நிதியின் மூலமும் உலருணவுப் பொதிகளை நேரில் சென்று வழங்கினார்.

இதன்போது மாங்கேணி பிரதேச விவசாய சங்கப்பிரதிநிதிகள், வாழைச்சேனை பிரதேச இளைஞர்களும் கலந்து கொண்டு விவசாயக் குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கி வைத்தனர்.

ஊரடங்குச் சட்ட நடவடிக்கையினால் தங்களது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் நஷ்டத்தை எதிர்நோக்கியதால் பயிர்களைச் சரியாகப் பராமரிக்க முடியாமல் போனதாலும், விளைச்சல் குறைந்தாகவும் நோய்த்தாக்கம் அதிகமாக ஏற்பட்டதாகவும் அதனால் தங்கள் வாழ்கைக்கு உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு காணப்பட்டதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad