5000 ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொடுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கு மேலதிக கொடுப்பனவு - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 6, 2020

5000 ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொடுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கு மேலதிக கொடுப்பனவு

5000 ரூபா கொடுப்பனவை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் செயற்பாட்டில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

கொடுப்பனவு வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களின் சேவையை கௌரவித்து, அவர்களுக்கான மேலதிக கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தர்கள், விவசாய ஆராய்ச்சி உதவியாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் குடும்பநல சுகாதார தாதியர் ஆகியோருக்கு இந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவிரைவில் வழமைக்குக் கொண்டு வர முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad