30 இலட்சம் ரூபா பண மோசடி - சந்தேகநபர் ஹெரோயினுடன் கைது - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 19, 2020

30 இலட்சம் ரூபா பண மோசடி - சந்தேகநபர் ஹெரோயினுடன் கைது

முகக் கவசம் பெற்றுத் தருவதாகக் கூறி 30 இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. 

இது தொடர்பில் நீர்கொழும்பு வீதி, வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், கொழும்பு குற்றவியல் பிரிவினரிடம் நேற்று (18), முறைப்பாடு செய்திருந்தார்.

இம்முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த சந்தேகநபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதோடு, சந்தேநபரின் உடமையிலிருந்த 03 கிராம் 800 மில்லி கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. 

செவணகல பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை இன்று (19) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றவியல் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad