அலி ஸாஹிர் மௌலானா அவர்களது தொடரும் மனித நேயம் - இன்றும் கொழும்பில் நிர்க்கதி நிலையாகி இருந்த 150 பேர் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பு - News View

Breaking

Post Top Ad

Friday, May 22, 2020

அலி ஸாஹிர் மௌலானா அவர்களது தொடரும் மனித நேயம் - இன்றும் கொழும்பில் நிர்க்கதி நிலையாகி இருந்த 150 பேர் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பு

தற்போதைய இடர் காலத்தில் தன்னால் இயலுமான பணிகளை எவ்வித தயக்கமும் இன்றி மக்களுக்காக நேரடியாகவே களத்தில் நின்று முன்னெடுக்கும் ஒருவராக அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் திகழ்கிறார்கள்.

அந்த வகையில் கொழும்பிலே நிர்க்கதி நிலைக்கு ஆளாகி சொந்த இடங்களுக்கு செல்ல முடியாது இருந்த சுமார் 320 பேர் ஏற்கனவே அலி ஸாஹிர் மௌலானா அவர்களது ஏற்பாட்டிலே அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொலைபேசி மற்றும் முகநூல் வாயிலாக தங்களது விபரங்களை வழங்கிய மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, கண்டி, பதுளை ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 150 பேர் பொது போக்குவரத்து ஏற்பாடுகளின் மூலம் தங்களது சொந்த இடங்களுக்கு தற்போது கொழும்பு ஷாலிக்கா மைதானத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களது விபரங்களை பெற்று சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான தொடர் முயற்சிகளை முன்னெடுத்து வந்த நிலையில் நேற்று முன்தினம் நேரடியாக அனைவரையும் ஒருங்கிணைத்து அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை பெற்றுக்கொடுத்ததுடன், அதேபோல் இன்றையதினம் விசேட பொது போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொண்டு உரிய முறைகளை பின்பற்றி சொந்த இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

கொரோனா தொற்று சம்பந்தப்பட்ட கெடுபிடிகள் மிகவும் இறுக்கமாகவும், மிகவும் அவதானத்துடன் கையாளப்படுகின்ற மேல் மாகாணத்திலிருந்து குறிப்பாக கொழும்பு மாவட்டத்திலிருந்து பிற மாவட்டத்துக்கு செல்வதென்றால் பல முக்கியமானதும், இறுக்கமானதுமான சுகாதார, பாதுகாப்பு, போக்குவரத்து சம்பந்தப்பட்ட படிப்படையான செயல்முறைகளை எல்லாம் கட்டம் கட்டமாக பேணி மேல் மாகான ஆளுனர், மேல் மாகான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், கொழும்பு மாநகர மேயர், கொழும்பு மாநகர சிரேஷ்ட சுகாதார அதிகாரிகள் அனைவருடனும் தொடர்பு கொண்டு ஒன்றிணைக்கப்பட்ட நடவடிக்கைகளை சாதுரியமாக கையாண்டதன் பயனால் இன்று பல நூற்றுக்கணக்கானவர்கள் குடும்பங்களுடன் சந்தோஷமாக தத்தம் ஊர்களுக்கு மீண்டு சந்தோஷ பெருமூச்சுடன் அவர்களது திருப்தியை வெளிப்படுத்தியதனை அவதானிக்க முடிந்தது.
இதற்காக இன்று அதிகாலை முதலே நேரடியாக களத்திலே நின்று பல்வேறு பகுதிகளிலும் இருந்தவர்களை ஒருங்கிணைத்து, பொலிஸ் மற்றும் சுகாதார பிரிவினரின் நேரடி வழிகாட்டலுடன் அனுப்பி வைக்கப்படும் வரை முழு ஏற்பாடுகளை அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டுள்ளார்கள்.

குறித்த பட்டியலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர், காத்தான்குடி கல்குடா பகுதிகளைச் சேர்ந்த சுமார் 44 பேர் தற்போது ஊர் திரும்பிக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நிர்க்கதி நிலைக்கு ஆளாகி இருந்த இவர்களை புனித நோன்பு பெருநாள் தினத்திலேனும் உறவுகளை சந்திக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்து ஓரளவு நிம்மதியையும், சந்தோசத்தையும் ஏற்படுத்தி கொடுத்ததுடன், விபரங்கள் வழங்கப்பட்ட நாளில் இருந்து அவர்களோடு தொடர்புகளை பேணி அவ்வப்போது அவர்களது தேவைகளை தேடிச் சென்று நிறைவேற்றிக் கொடுத்த அலி ஸாஹிர் மௌலானா அவர்களுக்கு உறவினர்கள் தமது நன்றிகளையும் பிரார்த்தனைகளையும் சமர்ப்பிக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad