உலக நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு பிரதமர் மஹிந்தவின் செய்தி - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 7, 2020

உலக நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு பிரதமர் மஹிந்தவின் செய்தி

(இராஜதுரை ஹஷான்) 

கொரோனா வைரஸ் தொற்று பரவலில் சிக்குண்டுள்ள உலக நாடுகளில் வாழும் இலங்கையர்கள் குறித்து அரசாங்கம் முழு அளவில் கவனம் செலுத்தியுள்ளது. 

சர்வதேச விதிமுறைகளுக்கு அமைவாக செயற்பட்டு அவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

இத்தாலி கப்பலிலிருந்த இலங்கையை சேர்ந்த பணியாளரான அநுர பண்டார இணையத்தளம் ஊடாக ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் சேவையை பெற்றுக்கொள்ள வந்திருந்த நிலையில் உரிய விதிமுறைகளை பின்பற்றி குறித்த இலங்கையரை நாட்டிற்கு அழைத்து வர கடற்படை நடவடிக்கை எடுத்ததாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார். 

எனவே தற்போது காணப்படும் நிலைமையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை சர்வதேச பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைவாக நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

மேலும் உலகில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையில் வெளிநாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்களையும் நாட்டிற்கு அழைத்து வர கூடிய விதிமுறை இல்லை. இந்நிலையில் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் வெளிநாடுகளில் உள்ள எந்தவொரு இலங்கையரையும் தனிமைப்படுத்த போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment