மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 29, 2020

மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை

நேற்று (28) ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அம்பாறை மாவட்டத்திற்கும் பொதுமக்கள் பயணம் செய்வதற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அனுமதி வழங்கவில்லை.

மட்டக்களப்பு பெரியகல்லாறு பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து அதனூடாக அம்பாறை மாவட்டத்திற்குள் பிரவேசிப்பதற்காகவும் அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் பிரவேசிப்பதற்காகவும் வருகைதந்த பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களது அடையாள அட்டடைகள் பரிசோதிக்கப்பட்ட பின்னர் திருப்பியனுப்பி வைக்கப்பட்டனர்.

அவசியமான, தவிர்க்க முடியாத பயணங்களை மேற்கொள்வோர் மட்டும் பொலிஸ் மற்றும் படையினரால் பயணங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காகவே பொலிஸாரும் படையினரும் தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பொதுமக்கள் அநாவசியமான பயணங்களை செய்வதை தவிர்த்து தங்ளது பாதுகாப்பு பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பொதுமக்களை கேட்டுக் கொள்வதாக பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள படையினர் தெரிவித்தனர்.

பாண்டிருப்பு தினகரன் நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad