விண்ணப்பித்து ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போருக்கு ஐம்பதாயிரம் ரூபா முற்பணம் - மட்டக்களப்பு அரசாங்க அதிபர் - News View

Breaking

Post Top Ad

Tuesday, April 7, 2020

விண்ணப்பித்து ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போருக்கு ஐம்பதாயிரம் ரூபா முற்பணம் - மட்டக்களப்பு அரசாங்க அதிபர்

மட்டக்களப்பில் அரச பணியிலிருந்து அண்மையில் இளைப்பாறி ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போருக்கு அரச சுற்றறிக்கைக்கமைய ஏப்ரல், மே மாதம் வரைக்குமாக தலா 25 ஆயிரம் ரூபாய் முற்பணம் உடனடியாக வழங்குமாறு மட்டக்களப்பு அரசாங்க அதிபர்.கலாமதி பத்மராஜா அரச திணைக்களத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

பொதுநிருவாக அமைச்சு அண்மையில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டவாறு அரச பணியிலிருந்து அண்மையில் இளைப்பாறி இதுவரையில் ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போருக்கு ஓய்வூதியத் திணைக்களம் வழமைக்கு திரும்பி செயல்படும் வரை ஏப்ரல், மே மாதம் வரைக்குமாக தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் 50 ஆயிரம் ரூபா முற்பணம் உடனடியாக வழங்குமாறு இவர் அறிவித்துள்ளார்.

பொதுநிருவாக அமைச்சு விடுத்துள்ள 8/2020 சுற்றறிக்கையில் சகல அரச திணைக்களத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்விதம் அரச பணியிலிருந்து அண்மையில் இளைப்பாறி இதுவரையில் ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போர் தாம் கடைசியாக பணி புரிந்த திணைக்களத்தின் தலைவரிடம் இதனை கேட்டு பெற்றுக் கொள்ளுமாறும் இந்த முற்றுபண ஓய்வூதியம் பெற்றுக் கொள்வதில் ஏதாவது தடையிருந்தால் மாவட்ட செயலகத்தின் செயலணி இலக்கமான 065-2222235 உடன் தொடர்பு கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போருக்கு அறிவிக்கின்றார்.

இதேபோல் குறித்த இதுவரையில் ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போருக்குரிய முற்றுபண ஓய்வூதியத்தை உடனடியாக அவர்களின் வீடுகளுக்குச் சென்று பொது நிருவாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டவாறு வழங்குவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா இம்மாவட்ட சகல அரச திணைக்களங்களின் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றார்.

எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments:

Post a Comment

Post Bottom Ad