சிறுபோகச் செய்கை ஆரம்பம் - விவசாயிகள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Sunday, April 5, 2020

சிறுபோகச் செய்கை ஆரம்பம் - விவசாயிகள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு

எஸ்.எம்.எம்.முர்ஷித்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாகவும் நாடளாவிய ரீதியில் ஊடரங்குச் சட்டம் போடப்பட்டமை காரணமாகவும் விவசாயிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த வகையில், ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள கால வேளையில் விவசாயிகள் விவசாயச் செய்கையை மேற்கொள்ள முடியுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து விவசாயிகள் சிறுபோகச் செய்கையினை மேற்கொண்டு வருவதுடன் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை விவசாய கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழியங்கும் வாகனேரி, பொத்தானை, பொண்டுகள்சேனை, காவத்தமுனை போன்ற பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சிறுபோகச் செய்கை விதைப்பு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது.

வாழைச்சேனை விவசாய கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் 3100 விவசாயிகளினால் 14300 ஏக்கரில் சிறுபோக விவசாயச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதேச உத்தியோகத்தர் எம்.ஏ.ரசீட் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள கால வேளையில், விவசாயிகள் விவசாயச் செய்கையைத் திறம்பட எவ்வித தடைகளுமின்றி மேற்கொள்வதற்கும் வழியமைத்துக்கொடுத்த ஜனாதிபதிக்கு விவசாயிகள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad