பணி செய்யும் போது இறந்தால் 50 இலட்சம் வழங்கப்படும் : நிதியுதவியை அதிகரித்து அறிவித்தார் தமிழக முதல்வர் - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 22, 2020

பணி செய்யும் போது இறந்தால் 50 இலட்சம் வழங்கப்படும் : நிதியுதவியை அதிகரித்து அறிவித்தார் தமிழக முதல்வர்

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபடும் வைத்தியர்கள் உள்ளிட்ட அரசு பணியாளர்கள் எவரேனும் பணியில் இருக்கும்போது துரதிஷ்டவசமாக உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபா. 10 லட்சம் வழங்கப்படும் என்றும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

மேலும், கொரோனா தடுப்பு பணியின்போது தொற்று ஏற்பட்டு வைத்தியர்கள் இறந்தால் 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படும். வைத்தியத்துறை மட்டுமின்றி காவல் துறை, உள்ளாட்சி, தூய்மைப் பணியாளர்கள் உட்பட அனைத்துத்துறை பணியார்கள் இறந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும். 

உயிரிழக்கும் வைத்தியர்கள் உட்பட அனைத்து துறை பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும். 

கொரோனா தடுப்பு பணியின்போது அரசு மற்றும் தனியார் பணியாளர்கள் இறந்தால், அவர்களின் பணியை பாராட்டி விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். 

உயிரிழக்கும் பணியாளர்களின் உடல்கள் உரிய மரியாதையுடன் பாதுகாப்பாக அடக்கம் செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad