இலங்கையில் கொரோனோ தொற்றியோர் 416 ஆக அதிகரிப்பு - இன்று மேலும் 30 கடற்படையினர் அடையாளம் - கர்ப்பிணிக்கு கொரோனா - ஒரே நாளில் அதிகளவானோர் இன்று பதிவு - News View

About Us

About Us

Breaking

Friday, April 24, 2020

இலங்கையில் கொரோனோ தொற்றியோர் 416 ஆக அதிகரிப்பு - இன்று மேலும் 30 கடற்படையினர் அடையாளம் - கர்ப்பிணிக்கு கொரோனா - ஒரே நாளில் அதிகளவானோர் இன்று பதிவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று (24) பிற்பகல் 6.30 மணியளவில், தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 414 இலிருந்து 416 ஆக அதிகரித்துள்ளது.

அதற்கமைய, இன்றையதினம் (24) இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 48 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 04 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று (24) அடையாளம் காணப்பட்ட 48 பேரில் 30 பேர் கடற்படை வீரர்கள் என்பதோடு, 11 பேர், பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்தவர்கள் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

மேலும் 05 பேர் விடுமுறைக்காக வீடு திரும்பிய கடற்படை வீரர்கள் என அவர் தெரிவித்துள்ளார். 

குறித்த ஐவரும்,
இரத்தினபுரி, ஹிதில்லகந்த
குருணாகல் - பொல்கஹவெல உடபொல
குருணாகல் - கீனியாபொல
பதுளை - கிராந்துருகோட்டை, பஹல ரத்கிந்த
கண்டி - தம்புள்ளை அதபோதிவெவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மருதானையைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவர் டி சொய்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர இன்று (24) 8.00 மணியளவில் மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த 3 தினங்களில் கடற்படையைச் சேர்ந்த 60 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 416 பேரில் தற்போது 300 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இதுவரை 109 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இதுவரை 07 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 183 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

அடையாளம் - 416
குணமடைவு - 109
இன்று அடையாளம் - 48
இன்று குணமடைவு - 04
சிகிச்சையில் - 300
மரணம் - 07

மரணமடைந்தவர்கள் - 07
இலங்கையில் - 07
ஏப்ரல் 08 - ஒருவர் (07)
ஏப்ரல் 07 - ஒருவர் (06)
ஏப்ரல் 04 - ஒருவர் (05)
ஏப்ரல் 02 - ஒருவர் (04)
ஏப்ரல் 01 - ஒருவர் (03)
மார்ச் 30 - ஒருவர் (02)
மார்ச் 28 - ஒருவர் (01)

குணமடைந்தவர்கள் - 109
ஏப்ரல் 23 - 04 பேர் (109)
ஏப்ரல் 22 - 03 பேர் (105)
ஏப்ரல் 21 - 04 பேர் (102)
ஏப்ரல் 20 - 02 பேர் (98)
ஏப்ரல் 19 - 10 பேர் (96)
ஏப்ரல் 18 - 09 பேர் (86)
ஏப்ரல் 17 - 09 பேர் (77)
ஏப்ரல் 16 - 05 பேர் (68)
ஏப்ரல் 15 - 02 பேர் (63)
ஏப்ரல் 14 - 05 பேர் (61)
ஏப்ரல் 13 - 00 பேர் (56)
ஏப்ரல் 12 - 02 பேர் (56)
ஏப்ரல் 11 - 00 பேர் (54)
ஏப்ரல் 10 - 05 பேர் (54)
ஏப்ரல் 09 - 05 பேர் (49)
ஏப்ரல் 08 - 02 பேர் (44)
ஏப்ரல் 07 - 04 பேர் (42)
ஏப்ரல் 06 - 05 பேர் (38)
ஏப்ரல் 05 - 06 பேர் (33)
ஏப்ரல் 04 - 03 பேர் (27)
ஏப்ரல் 03 - 03 பேர் (24)
ஏப்ரல் 02 - 00 பேர் (21)
ஏப்ரல் 01 - 04 பேர் (21)
மார்ச் 31 - 03 பேர் (17)
மார்ச் 30 - 03 பேர் (14)
மார்ச் 29 - 02 பேர் (11)
மார்ச் 28 - 02 பேர் (09)
மார்ச் 27 - ஒருவர் (07)
மார்ச் 26 - 03 பேர் (06)
மார்ச் 25 - ஒருவர் (03)
மார்ச் 24 - 00 பேர் (02)
மார்ச் 23 - ஒருவர் (02)
பெப் 19 - 01 (சீனப் பெண்)

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை - 416
ஏப்ரல் 24 - 48 பேர் (416)
ஏப்ரல் 23 - 38 பேர் (368)
ஏப்ரல் 22 - 20 பேர் (330)
ஏப்ரல் 21 - 06 பேர் (310)
ஏப்ரல் 20 - 33 பேர் (304)
ஏப்ரல் 19 - 17 பேர் (271)
ஏப்ரல் 18 - 10 பேர் (254)
ஏப்ரல் 17 - 06 பேர் (244)
ஏப்ரல் 16 - 00 பேர் (238)
ஏப்ரல் 15 - 05 பேர் (238)
ஏப்ரல் 14 - 15 பேர் (233)
ஏப்ரல் 13 - 08 பேர் (218)
ஏப்ரல் 12 - 11 பேர் (210)
ஏப்ரல் 11 - 02 பேர் (199)
ஏப்ரல் 10 - 07 பேர் (197)
ஏப்ரல் 09 - ஒருவர் (190)
ஏப்ரல் 08 - 04 பேர் (189)
ஏப்ரல் 07 - 07 பேர் (185)
ஏப்ரல் 06 - 02 பேர் (178)
ஏப்ரல் 05 - 10 பேர் (176)
ஏப்ரல் 04 - 07 பேர் (166)
ஏப்ரல் 03 - 08 பேர் (159)
ஏப்ரல் 02 - 03 பேர் (151)
ஏப்ரல் 01 - 05 பேர் (148)
மார்ச் 31 - 21 பேர் (143)
மார்ச் 30 - 05 பேர் (122)
மார்ச் 29 - 02 பேர் (117)
மார்ச் 28 - 09 பேர் (115)
மார்ச் 27 - 00 பேர் (106)
மார்ச் 26 - 04 பேர் (106)
மார்ச் 25 - 00 பேர் (102)
மார்ச் 24 - 05 பேர் (102)
மார்ச் 23 - 10 பேர் (97)
மார்ச் 22 - 09 பேர் (87)
மார்ச் 21 - 06 பேர் (78)
மார்ச் 20 - 06 பேர் (72)
மார்ச் 19 - 12 பேர் (66)
மார்ச் 18 - 11 பேர் (54)
மார்ச் 17 - 14 பேர் (43)
மார்ச் 16 - 10 பேர் (29)
மார்ச் 15 - 08 பேர் (19)
மார்ச் 14 - 05 பேர் (11)
மார்ச் 13 - 02 பேர் (06)
மார்ச் 12 - 02 பேர் (04)
மார்ச் 11 - ஒருவர் (02)
ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)

No comments:

Post a Comment