வனஜீவராசி அதிகாரி கொல்லப்பட்ட சம்பவம் - நால்வருக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Friday, April 24, 2020

வனஜீவராசி அதிகாரி கொல்லப்பட்ட சம்பவம் - நால்வருக்கு விளக்கமறியல்

வனஜீவராசிகள் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரையும் மே மாதம் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இச்சந்தேகநபர்கள் இன்றையதினம் (24) மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே குறித்த விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (22) இரவு தம்பகல்ல, கல்ஓயா தேசிய பூங்காவில் வேட்டைக்காரர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், இங்கினியாகலை வனஜீவராசிகள் அலுவலகத்தில் பணி புரிந்து வந்த 25 வயதுடைய வனஜீவராசிகள் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். 

குறித்த பூங்கா பகுதியை சுற்றிவளைக்க இங்கினியாகலை வனஜீவராசிகள் குழுவினர் சென்றபோதே, வேட்டைக்காரர்கள் குழுவினரால் இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் 12 துளை கொண்ட துப்பாக்கியொன்றுடன் சந்தேகநபர்கள், கைது செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment