இலங்கையில் மூன்றாவது கொரோனா நோயாளி குணமடைந்தார் - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 25, 2020

இலங்கையில் மூன்றாவது கொரோனா நோயாளி குணமடைந்தார்

கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொருவர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

நேற்றுமுன்தினம் (23) 52 வயதான பயண வழிகாட்டி IDH மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வெளியேறியிருந்தார். இவர் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றி குணமடைந்த முதலாவது இலங்கையர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரி 27ஆம் திகதி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்ட சீனப் பெண், கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி குணமடைந்து நாடு திரும்பியிருந்தார்.

இவர் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த முதலாவது நபராவார்.

தற்போது இலங்கையில் 102 கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவர்களில் மூவர் குணமடைந்துள்ளனர்.

அந்த வகையில், 99 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதோடு, மேலும் 255 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad