கடலில் மிதந்து வந்த பை! கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி!! - News View

Breaking

Post Top Ad

Monday, March 23, 2020

கடலில் மிதந்து வந்த பை! கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இலங்கை கடற்படை நேற்றைய (22) தினம் தலைமன்னார் கலங்கரை விளக்கத்திக்கு வடக்கு கடல் பகுதியில் நடத்திய சிறப்பு ரோந்துப் பணியின் போது 76 கிலோ கிராம் ஈரமான கேரள கஞ்சாவை கைப்பற்றியது.

இலங்கைக்கு கடல் வழியாக கொண்டு வரப்படும் போதைப் பொருள் கடத்தல் முயற்சிகளைத் தடுக்க இலங்கை கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

அதன்படி, தலைமன்னார் கலங்கரை விளக்கத்தின் வடக்கு கடல் பகுதியில் சிறப்பு ரோந்துப் பணியின் போது சந்தேகத்திற்கிடமான பை ஒன்று கடலில் மிதப்பதை வட மத்திய கடற்படை கட்டளை மாலுமிகள் கவனித்தனர்.
அதன்படி, சந்தேகத்திற்கிடமான பையை முழுமையாக சோதனை செய்த பின்னர், அவற்றில் 16 பொதிகளாக இருந்த கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த கேரள கஞ்சா 76 கிலோ, ஈரமான எடை கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன் குறித்த கேரள கஞ்சா பொதி கடற்படையால் கைது செய்யப்பட்டன.

நாட்டை சுற்றியுள்ள கடலில் கடற்படை நடத்திய தேடல் நடவடிக்கைகளின் விளைவாக கடத்தல்காரர்கள் கஞ்சாவை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மேலதிக விசாரணைகளுக்காக முலங்காவில் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad