காணொளி மூலம் நடைபெறவுள்ள சார்க் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 15, 2020

காணொளி மூலம் நடைபெறவுள்ள சார்க் நாடுகளின் தலைவர்கள் கூட்டம்

கொரோனா தொற்று குறித்து ஆலோசிப்பதற்காக சார்க் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காணொளி மூலமாக இடம்பெறவுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பிராந்திய நாடுகளிடையே பரவுவதை தடுக்கும் நோக்கில் இந்த பிராந்திய நாட்டு தலைவர்களுடன் ஜனாதிபதி கோட்டாபய ராயபக்ஷ இன்று மாலை 5.00 மணிக்கு செய்மதி தொலைபேசி வசதிகள் ஊடாக கலந்துரையாடவுள்ளார்.

கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசிப்பதற்காக காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த, சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாடுகள் வரவேற்றிருந்தன. இந்நிலையிலேயே இந்தியப் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்த நாடுகளின் தலைவர்கள் காணொளியில் இன்று மாலை ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சார்க் நாடுகளின் அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், பூட்டான், மாலைத்தீவு, ஆப்கானிஸ்தான் என்பன உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment