பொதுமக்கள் அத்தியாவசிய உணவு பொருட்களை எவ்வித தட்டுப்பாடுமின்றி, குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும் - சமல் ராஜபக் - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 24, 2020

பொதுமக்கள் அத்தியாவசிய உணவு பொருட்களை எவ்வித தட்டுப்பாடுமின்றி, குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும் - சமல் ராஜபக்

(இராஜதுரை ஹஷான்) 

ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கப்படும் வேளையில் பொதுமக்கள் லங்கா சதோச மற்றும் விற்பனை நிலையங்களில் அத்தியாவசிய உணவு பொருட்களை எவ்வித தட்டுப்பாடுமின்றிய விதத்தில் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும். பல மாத காலத்திற்கான உணவு பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டு கையிறுப்பில் உள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பொருட்களை மக்கள் கொள்வனவு செய்யும் போது ஒரு இடத்தில் ஒன்று கூடுவதை தவிர்ப்பதற்கு தற்போது பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

அதற்கமைய அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய உணவு பொதி 500 ரூபா தொடக்கம் 1000 ரூபா வரையில் மானிய முறையில் வீடுகளுக்கு சென்று விற்பனை முகவர்கள் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தம்புள்ளை, மீகொட மற்றும் நாரஹேன்பிடிய ஆகிய மொத்த விற்பனை நிலையங்களில் இருந்து உணவு பொருட்கள் நாடு தழுவிய ரீதியில் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள், எடுக்கப்பட்டுள்ளன. 

ஆகவே உணவு பொருட்களில் எவ்வித தட்டுப்பாடும் கிடையாது பல மாதங்களுக்கு தேவையான பொருட்பள் கைவசம் உள்ளது. 

தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்புக்கு ஈடுப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு உணவு வழங்குவதற்கான முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைய பிறீமா லங்கா நிறுவனம், 200 தொன் கோதுமை மா வினையும், 20 மெற்றிக் தொன் கோழி இறைச்சியையும், 2 தொன் சொசேஜஸ் மற்றும் 1 இலட்சம் முட்டை, 5000 ஆயிரம் யோகட் ஆகியவற்றை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. 

ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கப்படும் வேளையில் பொதுமக்கள் சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி அமைதியான முறையில் விற்பனை நிலையங்களில் பொருட்களை குறுகிய நேரத்திற்குள் கொள்வனவு செய்துக் கொள்ள வேண்டும். 

கொரோனா வைரஸ் ஒழிப்பிற்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து செயற்பாடுகளுக்கும் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவது அவரவர் பொறுப்பாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad