ஆட்சேபனைகளை முன்வைக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு கால அவகாசம் - News View

Breaking

Post Top Ad

Monday, March 2, 2020

ஆட்சேபனைகளை முன்வைக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு கால அவகாசம்

பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கிய முன்னாள் ஜனாதிபதியின் தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களுக்கு எதிராக, ஆட்சேபனைகளை முன்வைக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் எல் டி. பீ. தெஹிதெனிய, பிரீதிஉத்மன் சூரசேன மற்றும் எஸ். துரைராஜா ஆகியோர் இந்த தீர்மானத்தை பிறப்பித்தனர். 

இதற்கென கட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகள் இருப்பின் அவற்றைத் தாக்கல் செய்வதற்கு மூன்று வார கால அவகாசத்தை உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கியது.

மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திரம் மற்றும் காணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட ஆகியோர் மேற்படி அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad