இச்சூழ்நிலை தொடரும் பட்சத்தில் தொடர் உதவிகளை வழங்க தயாராக உள்ளேன் முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் - கல்குடா ஜம்இய்யத்துல் உலமாவின் கோரிக்கைக்கு அமைவாக உலர் உணவுப் பொதிகள் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, March 26, 2020

இச்சூழ்நிலை தொடரும் பட்சத்தில் தொடர் உதவிகளை வழங்க தயாராக உள்ளேன் முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் - கல்குடா ஜம்இய்யத்துல் உலமாவின் கோரிக்கைக்கு அமைவாக உலர் உணவுப் பொதிகள் கையளிப்பு

தற்போது நாட்டில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை அடைவதோடு அன்றாட நடவடிக்கைகளிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தில் அதிகூடிய முயற்சிகளையும் உதவிகளையும் மேற்கொண்டு வரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் செயற்பாடுகளின் ஓர் அங்கமாக ஏறாவூர், ஓட்டமாவடி, காத்தான்குடி போன்ற பிரதேசங்களில் பல இலட்சம் பெறுமதிக்குள் உலர் உணவுப் பொதிகள் தனது சொந்த நிதியில் கையளிக்கப்பட்டு வருகின்றது.

அதன் அடிப்டையில் இன்று 26.03.2020 அகில இலங்கை ஐம்இய்யத்துல் உலமா சபை ஓட்டமாவாடி கல்குடா கிளையினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரினால் அரிசி, சீனி, கோதுமை மா மற்றும் பருப்பு உள்டங்கிய 250 உலர் உணவுப் பொதிகளும் சம்மேளனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்  நஸீர் அஹமட் குறிப்பிடுகையில் மக்களின் நலன் கருதி இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளும் சம்மேளனங்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது நாட்டில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோயினை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் பொதுமக்களின் கொள்வனவு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு அன்றாட நடவடிக்கைகள் முடக்கப்பட்டு வருகின்றமை உணர முடிகின்றது.

இந்நிலையை கருத்தில் கொண்டு ஓட்டமாவடி ஜம்இய்யத்துல் உலமா சபையினர் முன்மாதுரியான செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றமைக்கு குறிப்பாக தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு மனதார பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்ததோடு இவ்வாறான பணிகளுக்கு இறையுதவி கிடைக்க பிரார்த்திக்கின்றேன் என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சூழ்நிலையில் எமது மக்கள் அனைவரையும் இத்தொற்று நோயில் இருந்து இறைவன் பாதுகாப்பதோடு அசாதாரண சூழ்நிலையும் மாற வேண்டும் என்று இறைவனிடத்தில் பிராத்திக்கின்றேன் என சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து இச்சூழ்நிலை தொடரும் பட்சத்தில் சம்மேளனத்தின் ஊடாக தொடர் உதவிகளை வழங்க தயாராக உள்ளேன் என்று கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ZA.நஸீர் அகமட் சுட்டிக்காட்டியமை வரவேற்கத்தக்கது.

No comments:

Post a Comment