சட்ட விரோதமாக மின்சார இணைப்பைப் பெற்றுக் கொண்ட 84 பேர் கைது - News View

Breaking

Post Top Ad

Sunday, March 1, 2020

சட்ட விரோதமாக மின்சார இணைப்பைப் பெற்றுக் கொண்ட 84 பேர் கைது

மன்னார் மின்சார சபையின் விசேட சோதனை பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போது தமது வீடுகளுக்கு சட்ட விரோதமாக மின்சார இணைப்பைப் பெற்றுக் கொண்ட 84 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மின்சார சபையின் விசேட சோதனை பிரிவு முகாமையாளர் இந்திக பெர்னான்டோவிற்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கமையவே குறித்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொரிஸார் தெரிவித்தனர்.

குறித்த சோதனை நடவடிக்கைகளின் போது சட்ட விரோதமான முறையில் மின்சாரம் பெற்று வந்த முருங்கன் பிரதேசத்தைச் சேர்ந்த 5 சந்தேக நபர்களும், சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த 79 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டவர்களிடமிருந்து 10000 ரூபா - 50000 ரூபா வரையில் தண்டப் பணம் அறவிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

சட்ட விரோதமான மின்சார இணைப்பு பெறுபவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைக்கப்பெறின் அதனை 1987 மற்றும் 0112422259 ஆகிய தொலைபேசி எண்களுடாகவும் 0112433183 என்ற மின்னஞ்சல் எண்ணூடாகவும் மின்சார சபைக்கு அறியத்தருமாறு மின்சார சபை முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad