புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 30 சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, March 2, 2020

புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 30 சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு

மாவனல்லை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 30 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று (03) மாவனல்லை நீதவான் உபுல் ராஜகருணா முன்னிலையில் சந்தேகநபர்களை ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து, எதிர்வரும் மார்ச் 16ஆம் திகதி வரை அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.

அத்துடன், சம்பவம் தொடர்பில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜூன் 01ஆம் திகதி வரை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதவான் இதன்போது அனுமதி வழங்கினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad