கொரோனா ஒழிப்பிற்காக நிர்வாக சேவைகள் சங்கத்தினால் 2.5 மில்லியன் ரூபா நிதி உதவி - News View

About Us

About Us

Breaking

Thursday, March 26, 2020

கொரோனா ஒழிப்பிற்காக நிர்வாக சேவைகள் சங்கத்தினால் 2.5 மில்லியன் ரூபா நிதி உதவி

(எம்.மனோசித்ரா) 

முழு உலகமும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் இலங்கையில் கொரோனா ஒழிப்பிற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்ற தேசிய வேலைத்திட்டத்திற்காக நிர்வாக சேவைகள் சங்கம் 2.5 மில்லியன் ரூபாவை நிதியுதவியாக வழங்கியுள்ளது. 

நிர்வாக சேவைகள் சங்கத்தின் தலைவர் பிரபாத் சந்திரகீர்த்தி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் இந்நிதியை கையளித்துள்ளார். 

வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணங்களுக்காகவே தாம் இந்த நிதியுதவியை வழங்குவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. 

மேலும் வைரஸ் கட்டுப்பாட்டுக்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. 

தற்போதுள்ள அனர்த்த நிலைமையில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் நிர்வாக சேவைகள் சங்கம் மாவட்ட அதிபர்களுடனும் கிராம சேவர்களுடனும் கலந்துரையாடல்களையும் முன்னெடுத்துள்ளது. 

அதற்கமைய பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் செயலாளர்களுக்கு தலா 750,000 ரூபாவை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் நிர்வாக அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment