முதியோர் சமூகத்தை கொவிட் 19 வைரசிலிருந்து பாதுகாப்பதற்கு பொறுப்புடன் செயற்பட வேண்டும் - தேசிய முதியோர் செயலகத்தின் ஆலோசனைகள் - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 25, 2020

முதியோர் சமூகத்தை கொவிட் 19 வைரசிலிருந்து பாதுகாப்பதற்கு பொறுப்புடன் செயற்பட வேண்டும் - தேசிய முதியோர் செயலகத்தின் ஆலோசனைகள்

கொவிட் 19 பரவுவதையடுத்து கூடுதலான அனர்த்தத்தை எதிர்கொள்ளும் குழுவினராக வயதில் கூடியவர்கள் மற்றும் சிறுபிள்ளைகள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். அடையாளங்காணப்பட்டுள்ள பின்புலத்தின் கீழ் இந்தக் குழுவினரை வைரசிலிருந்து மிகவும் முக்கியமாக பாதுகாக்கும் தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கமைவாக, இலங்கையில் சுமார் 30 இலட்சம் பேரைக்கொண்ட முதியோர் சமூகத்தை கொவிட் 19 வைரசிலிருந்து பாதுகாப்பதற்காக பொறுப்புடன் செயற்பட வேண்டும் என தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது.

கொவிட் 19 வைரசு நாட்டில் பரவுவதன் மூலம் வயதில் முதிர்ந்த நபர்கள் இந்த வைரசு மூலம் பாதிப்புக்குள்ளாவதை தடுப்பதற்கு அமைவாக, தேசிய முதியோர் செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை முதுமை நோய் மருத்வர் வைத்திய விஞ்ஞான சங்கத்தின் தலைவர் டாக்டர் திருமதி பத்மா குணரத்ன அவர்களினால் கொவிட் 19 வைரசு பரவுவதை தொடர்ந்து அதிலிருந்து முதியோரை பாதுகாப்பதற்காக கீழ்கண்ட ஆலோசனைகளை உள்ளடக்கிய செய்தியொன்றை விடுத்துள்ளார்.

வீடுகளிலுள்ள முதியோரைப் போன்று அரச மற்றும் தனியார் பிரிவினால் நடத்தப்பட்டுவரும் முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர் கீழ்கண்ட ஆலோசனைகளை கடைபிடிக்க வேண்டும்.

01. இந்த வைரசு முதியோரான உங்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதினால் ஏனையோருடன் நெருங்கிய தொடர்புகொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

02. வைத்தியசாலை சிகிச்சைக்காக செல்வதை குறைத்து உங்களது மருந்தை ஏனையோரின் மூலம் அருகிலுள்ள மருந்தகங்களில் பெற்றுக்கொண்டு முறையாகப் பயன்படுத்துங்கள்.

03. தற்பொழுது கைகளை சவர்க்காரத்தைப் பயன்படுத்தி அடிக்கடி கழுவிக்கொள்ளுங்கள் (விசேடமாக பணப்பாவணை மற்றும் வெளியிடங்களுக்கு சென்று வந்த பின்னர்)

04. ஏனையோருடன் உரையாடும் பொழுது ஆகக்குறைந்தது 3 அடி இடைவெளி தூரத்தை கடைபிடியுங்கள்.

05. பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினரை அரவணைப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

06. இருமும் பொழுதும் தும்மும் பொழுதும் வாய் மற்றும் மூக்கை பாதுகாப்பாக மூடிக்கொள்ளவும்.

07. புதியவர்களை வீட்டுக்கு அழைத்தல் மற்றும் கூட்டமாக கூடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

08. அவசிய விடயத்திற்காக வீட்டிலிருந்து வெளியில் செல்லும் போது முகக்கவசங்களை அணிந்து கொள்ளுங்கள்.

09. எப்பொழுதும் கொதித்தாரிய நீரை பயன்படுத்துவதுடன் குளிர்பானங்களை அருந்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

10. மனதை எப்பொழுதும் அமைதியாக வைத்திருங்கள். சுகமான நித்திரை மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள்.

இதற்கு மேலதிகமாக வயது பிரிவுகளுக்கு அமைய நோக்கும் பொழுது வயதானவர்களுக்கு இந்த நோய் தொற்றும் சதவீதத்தில் 80 வயதிற்கு மேற்பட்டோருக்கு 15 சதவீதமும் 70 தொடக்கம் 79 வயதுக்குட்பட்டவர்களுக்கு 9 சதவீதமும், 60 - 69 வயதிற்குட்பட்டவர்களுக்கு 3.8 சதவீதமும் என்ற ரீதியில் இருக்கக்கூடும்.

இதற்கமைவாக, இந்த நிலை தணியும் வரை வயதானோர் மேற்கண்ட ஆலோசனைகளை கடைபிடித்து தமது இருப்பிடங்களில் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தேசிய முதியோர் செயலகம் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad