101 ஆக அதிகரித்தது இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 24, 2020

101 ஆக அதிகரித்தது இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பீடித்த நோயாளிகளின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகம் இதனை அறிவித்துள்ளது.

இன்று (24) பிற்பகல் 4.45 மணியளவில் மேலும் மற்றுமொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவ்வெண்ணிக்கை 100 இலிருந்து 101 ஆக உயர்ந்துள்ளது.

229 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்றைய தினம் (24) இதுவரை 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் இது வரை அடையாளம் காணப்பட்டோரில் சீனப் பெண் மற்றும் 52 வயது சுற்றுலா வழிகாட்டி ஆகிய இருவரும் குணமடைந்துள்ள நிலையில், தற்போது 99 பேர் கொரோனா தொற்று தொடர்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை
மார்ச் 24 - 04 பேர் (101)
மார்ச் 23 - 10 பேர் (97)
மார்ச் 22 - 09 பேர் (87)
மார்ச் 21 - 05 பேர் (78)
மார்ச் 20 - 13 பேர் (73)
மார்ச் 19 - 07 பேர் (60)
மார்ச் 18 - 11 பேர் (53)
மார்ச் 17 - 13 பேர் (42)
மார்ச் 16 - 10 பேர் (29)
மார்ச் 15 - 08 பேர் (19)
மார்ச் 14 - 05 பேர் (11)
மார்ச் 13 - 03 பேர் (06)
மார்ச் 12 - ஒருவர் (03)
மார்ச் 11 - ஒருவர் (02)
ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)

No comments:

Post a Comment