பொதுத் தேர்தலில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு - News View

Breaking

Post Top Ad

Friday, February 28, 2020

பொதுத் தேர்தலில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் கூட்டணிக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

பாராளுமன்ற வளாகத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி (ஜன பலவேகயே) தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரஊப் ஹக்கீம், தேசிய ஜன பலவேகயவுக்கு தமது கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் ஆதரவை வழங்க முன்வந்துள்ளதாகவும் கூறினார்.

இதற்கமைய எதிர்வரும் பொதுத் தேர்தலில் அக்கட்சியில் போட்டியிட ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் எம்.பிக்கள் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad