பொறியியலாளர் அப்துர் ரஹ்மானுடன் நடந்த பேச்சுவார்த்தை என்ன? - விளக்கி கூறுகின்றார் பொறியியலாளர் சிப்லி பாறூக் - News View

About Us

About Us

Breaking

Friday, February 28, 2020

பொறியியலாளர் அப்துர் ரஹ்மானுடன் நடந்த பேச்சுவார்த்தை என்ன? - விளக்கி கூறுகின்றார் பொறியியலாளர் சிப்லி பாறூக்

பொறியியலாளர் அப்துர் ரஹ்மானுடன் நடந்த பேச்சுவார்த்தை தொடர்பாக பொறியியலாளர் சிப்லி பாறூக் கருத்து தெரிவிக்கையில் நாங்கள் பரஸ்பரம் பல விட்டுக் கொடுப்புகளுடன் இந்த தேர்தலை முகம் கொடுக்க வேண்டும்.

அதே நேரத்தில் இந்த தேர்தலினூடாக நல்லதொரு தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும் என்கின்ற அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதுவரை நடைபெற்றிருக்கின்ற அந்தப் பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் எட்டப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றன. 

ஆகவே இன்னும் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்துவதனூடாக ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து எதிர்காலத்தில் நல்லதொரு தலைமைத்துவத்தை உருவாக்குகின்ற விடயத்துக்கு நாங்கள் பூரணமான ஆதரவைக் கொடுத்து அந்தத் தலைமைத்துவத்தை உருவாக்குவதனூடாக குறிப்பாக கடந்த 21.4.2019 சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்டிருக்கின்ற இந்த சூழலில் கத்தான்குடியை நோக்கி இருக்கின்ற பல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வாறான ஒரு தேர்தலினூடாக தெரிவு செய்யப்படும் பிரதிநிதி இந்தக் காத்தான்குடியினுடைய ஒட்டு மொத்த விடயங்களையும் நல்ல முறையில் முன் கொண்டு செல்வதோடு தேசியத்திலும் சமூகம் சார்ந்த விடயங்களை பேசக் கூடிய சமூகத்தினுடைய உரிமைகளைப் பற்றி விவாதிக்கக் கூடியவர்களை உருவாக்க வேண்டும் என்ற ரீதியிலும் இந்தப் பேச்சுவார்தைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஆகவே மிக விரைவாக இன்ஷாஅல்லாஹ் அதனுடைய நல்ல தீர்வுகள் எட்டப்பட்டு எதிர்வரும் 'பொதுத் தேர்தலில்' பல முனை போட்டிகளை தவிர்த்து நல்லதொரு சுமுகமான சூழலினூடாக எமது பிரதித்துவத்தை உறுதிப்படுத்துகின்ற ஒரு செயற்திட்டத்திற்காக நாங்கள் இப்பொழுது தொடர்ந்தும் பேசிக் கொண்டிருக்கின்றோம் என தெரிவித்தார்.

எம்.எஸ்.எம். நூர்தீன்

No comments:

Post a Comment