இஸ்ரேலில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு - புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து - News View

About Us

About Us

Breaking

Thursday, February 27, 2020

இஸ்ரேலில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு - புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

தகுதி பெற்ற இலங்கையர்களுக்கு பராமரிப்பு சேவை தொழில் துறையில் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இஸ்ரேல் அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு கடந்த 24 ஆம் திகதி இஸ்ரேலில் ஜெருசலேமில் உள்ள அந்நாட்டு வெளிநாட்டு அலுவலகத்தில் இடம்பெற்றது. 

இஸ்ரேல் அரசாங்கத்தின் சார்பில் இந்த ஒப்பந்தத்தில் அந்நாட்டு வெளிநாட்டு அமைச்சின் சார்பில் உள்நாட்டு அமைச்சர் ஆர்ய மௌலப் டெரி (Aryeh Machluf Deri) கைச்சாத்திட்டார்.

இலங்கையின் சார்பில் செயல்திறன் அபிவிருத்தி தொழில் மற்றும் தொழில் பாதுகாப்பு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்தன சார்பில் திறனாற்றல் அபிவிருத்தி, தொழில் மற்றும் தொழில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சரத் அபே குணவர்தன கைச்சாத்திட்டார்.

இஸ்ரேலில் வெளிநாட்டு பணியாளர்களை இணைத்துக் கொள்ளுதல் மற்றும் தற்காலிக தொழில்துறையில் ஈடுபடுத்தல், இஸ்ரேலில் நடைமுறையில் உள்ள சட்டம், இஸ்ரேல் தேசிய மனித வள சந்தை நிலைமை மற்றும் வெளிநாட்டு ஊழியர் தொழில் வாய்ப்புக்கான பகிரங்க பிரிவு தொடர்பில் இஸ்ரேல் அரசாங்கத்தின் கொள்கையைப் போன்று தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களுக்கு வருடாந்த கோட்டா மற்றும் ஒவ்வொரு தொழில் வாய்ப்புக்கான அனுமதிப் பத்திரம் வழங்குவதற்காக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment