நீருக்கடியில் காணொளிகளை பதிவு செய்யக்கூடிய ட்ரோன் கருவி கடற்படையிடம் கையளிப்பு - News View

Breaking

Post Top Ad

Saturday, February 22, 2020

நீருக்கடியில் காணொளிகளை பதிவு செய்யக்கூடிய ட்ரோன் கருவி கடற்படையிடம் கையளிப்பு

(எம்.மனோசித்ரா) 

நீருக்கடியில் காணொளிகளை பதிவு செய்யக் கூடிய புத்தம் புதிய ட்ரோன் கருவி நேற்றுமுன்தினம் கடற்படையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய ட்ரோன் கருவியை உருவாக்கிய தனியார் நிறுவனம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல்டி சில்வாவிடம் கையளித்துள்ளது. 

இந்த தனியார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சிரான் பெர்னாண்டோ இக்கருவியை கடற்படைத் தளபதியிடம் கடற்படைத் தலைமையகத்தில் வைத்து கையளித்துள்ளார். 
இந்த நீருக்கடியிலான ட்ரோன் கருவி தொலைவிலிருந்து இயக்கக் கூடிய வசதி கொண்டுள்ளதுடன் நீருக்கடியிலான பொருட்களை தெளிவாக காணொளியாகப் பதிவு செய்யக் கூடியது. 

அத்துடன் 100 மீற்றர் ஆழத்தில் நீருக்கடியில் மிகத் தெளிவான புகைப்படங்களையும் எடுக்கக் கூடியது. செயற்படுத்தப்பட்டு வரும் பவளப்பாறை திட்டத்தை மேலும் விருத்தி செய்ய இந்த நீருக்கடியிலான ட்ரோன் கருவி பயன்படுத்தப்படும். 

நீருக்கடியிலான சுழியோடிகளுக்கு இக்கருவி முக்கியமானதாக கருதப்படுகிறது. அத்துடன் கடற்படை மேற்கொள்ளும் சமுத்தரிம் சார் சூழல் பாதுகாப்பு திட்டத்துக்கு முக்கிய உதவி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad