முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை சிறையில் அடைத்தது அரசியல் பழிவாங்கல் - பத்தரமுல்லை சீலரத்தின தேரர் - News View

Breaking

Post Top Ad

Friday, February 28, 2020

முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை சிறையில் அடைத்தது அரசியல் பழிவாங்கல் - பத்தரமுல்லை சீலரத்தின தேரர்

நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்து செய்தது என்னவென்றால் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை சிறையில் அடைத்து ஒரு அரசியல் ரீதியான பழிவாங்கலை செய்துள்ளது என ஜனசென பெரமுனை கட்சியின் தலைவர் பத்தரமுல்லை சீலரத்தின தேரர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு ஜனசென பெரமுனை கட்சியின் தலைவர் பத்தரமுல்லை சீலரத்தின தேரர் நேற்று வெள்ளிக்கிழமை (28.02.2020) மாலை சென்று முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை சந்தித்த பின் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவத்தார்.

இந்த நாட்டில் இன ஒற்றுமை என்பது தமிழர்கள் சிங்களவர்கள் என எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்த தாய் நாட்டினை விடுவித்த சந்தர்ப்பத்தில் அபிவிருத்தி செய்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான ஒரு சம்பம் நிகழ்ந்தது மிகவும் மனவருத்தத்துக்குரிய ஒரு விடயமாகும்.

தற்போதைய அரசு பிள்ளையானுக்கு பிணை கொடுத்து அவருடைய செயற்பாட்டை செய்வதற்கு இடமளிக்கப்படும் என நாங்கள் அமைதியாக இருக்கின்றோம்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது கௌரவ நீதிமன்றத்துக்கு மதிப்பளிக்கின்றேன். வழக்கு தொடர்ந்து செல்வதால் இது தொடர்பாக நான் எந்த வசனமும் தெரிவிக்க விரும்பவில்லை.

நான் அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால் இந்த வழக்கை விரைவில் ஆராய்ந்து தீர்ப்பை வழங்கி நிரபராதி என்றால் நிரபராதி எனவும் குற்றவானி என்றால் குற்றவாளி எனவும் அவர்களுக்கு பிணை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

அனைத்து இனங்களும் ஒன்று சேர்ந்து நாட்டினை கட்டியொழுப்ப வேண்டும் இல்லையெனில் இந்த நாட்டினை எவராலும் கட்டியெழுப்ப முடியாது. 

ஒவ்வொருவருக்கும் இடையே வைராக்கியம் வேண்டாம் அப்படி வைராக்கியம் செய்பவர்களுக்கு பௌத்த மதகுரு என்ற வகையில் கருணை, அன்பு, செலுத்தி ஆசீர்வசிப்போம் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad