கல்முனை சுபத்திராராம விகாராதிபதி - மலிந்த சமூக அமைப்பின் தலைவர் ருஷான் மலிந்த சந்திப்பு - News View

Breaking

Post Top Ad

Saturday, February 29, 2020

கல்முனை சுபத்திராராம விகாராதிபதி - மலிந்த சமூக அமைப்பின் தலைவர் ருஷான் மலிந்த சந்திப்பு

பாறுக் ஷிஹான்

கல்முனை பிரதேசத்திற்கு மலிந்த சமூக அமைப்பின் தலைவர் ருஷான் மலிந்தவினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டது.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தருமான றியாஸ் தலைமையில் அவரது அலுவலகத்தில் நேற்று (29) மதியம் இடம்பெற்ற கலந்துரையாடலில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் பல்வேறு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன.

மேலும் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சுனாமி மீள்குடியேற்ற திட்டமான இஸ்லாமபாத் மீள்குடியேற்ற திட்டத்திற்கும் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடினார்.

இதன் போது கல்முனை பெண்களின் உரிமை அமைப்பு பிரதிநிதி கல்முனை பெண்களின் உரிமை செயற்பாட்டாளரும் கல்முனை மாநகர உறுப்பினருமான பஸீரா றியாஸ், கல்முனை சுபத்திராராம விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்தின தேரர், பள்ளிவாசல் நிர்வாகத்தினர், இளைஞர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad