அனைத்து பிரேரணைகளிருந்தும் தனித்து நீங்க முடியாது - மங்களவின் நடவடிக்கை தேசத்துரோக செயலாகும் - News View

About Us

About Us

Breaking

Monday, February 24, 2020

அனைத்து பிரேரணைகளிருந்தும் தனித்து நீங்க முடியாது - மங்களவின் நடவடிக்கை தேசத்துரோக செயலாகும்

(எம்.ஆர்.எம்.வஸீம்) 

மனித உரிமை பேரவையில் எமக்கு எதிராக கொண்டுவரப்பட்டிருக்கும் அனைத்து பிரேரணைகளில் இருந்தும் தனித்து நீங்க முடியாது எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடனே நீங்குவோம் என்றும் கூறினார். 

இலங்கையில் யுத்தக் குற்றம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து 2015ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு அமெரிக்கா கொண்டுவந்த 30/1 பிரேரணைக்கு கடந்த அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர தன்னிச்சையாக கைச்சாத்திட்டிருந்தார். 

அவ்வாறான பிரேரணைக்கு கைச்சாத்திடுவதாக இருந்தால் அது தொடர்பில் அமைச்சரவைக்கு தெரிவித்து அனுமதியை பெற்றுக்கொள்வதுடன் பாராளுமன்றத்துக்கும் அறிவித்திருக்க வேண்டும். ஆனால் அமைச்சரவைக்கும் தெரிவியாது, ஜனாதிபதிக்கும் அறிவிக்காமலே மங்கள சமரவீர கைச்சாத்திட்டிருக்கின்றார். 

அத்துடன் கடந்த ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையின்போதும் குறித்த பிரேரணையின் 40/1 க்கும் கடந்த அரசாங்கம் கைச்சாத்திட்டிருக்கின்றது. ஆனால் எமக்கு எதிராக யுத்தக் குற்றம் தெரிவித்து ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு பிரேரணை கொண்டுவந்த அமெரிக்கா, மனித உரிமை பேரவையில் இருந்து விலகியுள்ளது. 

அவ்வாறான நிலையில் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கிவந்த நாங்கள் பிரேரணையில் இருந்து நீங்குவதால் எந்த பிரச்சினையும் இல்லை. இதில் கைச்சாத்திட்ட மங்கள சமரவீரவுக்கு பிரச்சினை ஏற்படலாம். ஏனெனில் அவர் இலங்கை அரசாங்கத்தின் அனுமதி இல்லாமலே அதில் கைச்சாத்திட்டிருக்கின்றார். அவரின் நடவடிக்கை தேசத்துரோக செயலாகும்.

No comments:

Post a Comment