2015 - 2019 அரச வாகன கொள்வனவு குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு ஜே.வி.பி. சி.ஐ.டி.யில் முறைப்பாடு! - News View

Breaking

Post Top Ad

Thursday, February 13, 2020

2015 - 2019 அரச வாகன கொள்வனவு குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு ஜே.வி.பி. சி.ஐ.டி.யில் முறைப்பாடு!

(எம்.மனோசித்ரா) 

2015 - 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்காக கொள்வனவு செய்த வாகனங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு மக்கள் விடுதலை முன்னணி குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடளித்துள்ளது. 

இது தொடர்பல் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடளித்ததன் பின்னர் ஊடகங்கங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி வரை அப்போதைய அரசாங்கத்தால் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்காக 78 வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. 

இவற்றின் மொத்த பெறுமதி 28,700 இலட்சமாகும். இலங்கை போன்று கடன் சுமை காணப்படும் நாடுகளில் இவ்வாறான பெருந்தொகைக்கு வாகனங்களை கொள்வனவு செய்து அமைச்சர்களுக்காக செலவு செய்ய முடியாது. இவ்வாறு வாகன கொள்வனவு தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்ட பின்னர் சில அமைச்சர்கள் இதற்கு பதிலளிக்க ஆரம்பித்துள்ளனர். 

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர் அமைச்சராக இருந்த போது எவ்வித வாகன கொள்வனவும் இடம்பெறவில்லை என்று கூறுகின்றார். மஹிந்த அமரவீரவும் இதே போன்று கூறியுள்ளார். 

எனினும் அவர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக இருந்த போது இந்த வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. மஹிந்த அமரவீர அமைச்சராக இருந்த போதும் இவ்வாறு வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. 

எனினும் இவ்வாறான வாகன கொள்வனவு தொடர்பில் அமைச்சர்கள் அறிந்திருக்கவில்லை என்றால் குற்றப்புலனாய்வு பிரிவினர் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad