வாழைச்சேனை ஜுமைல் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம் - News View

Breaking

Post Top Ad

Friday, November 29, 2019

வாழைச்சேனை ஜுமைல் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்

(எச்.எம்.எம்.பர்ஸான்)
இலங்கை விமானப் படை நடாத்திய ஓவியப் போட்டியில் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவன் எம்.ஜே.எம். ஜுமைல் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

68 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை விமானப் படை தலைமயகம் நாடளாவ ரீதியிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளை நடாத்தியது அதில் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்திய ஓவியப் போட்டியில் குறித்த மாணவன் முதலிடம் பெற்று பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

விமானப்படை தலைமயகம் அனுப்பி வைத்த சான்றிதழ்களை குறித்த போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்ற மாணவனுக்கு வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம்.பரீட் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad