இது சிங்கள - பௌத்த நாடு புலிகள் போல் பாய்வதை தமிழர் நிறுத்த வேண்டும் - கன்னியா போராட்டம் குறித்து ஞானசார தேரர் - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 17, 2019

இது சிங்கள - பௌத்த நாடு புலிகள் போல் பாய்வதை தமிழர் நிறுத்த வேண்டும் - கன்னியா போராட்டம் குறித்து ஞானசார தேரர்

"தமிழர்கள் புலிகள் போல் உறுமிக்கொண்டு திரள்வதையும், சிங்கள - பௌத்த மக்களை அச்சுறுத்துவதையும் உடன் நிறுத்த வேண்டும். இது சிங்கள - பௌத்த நாடு என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். கன்னியாப் பிரச்சினை தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் சிங்கள - பௌத்த மக்களுக்கே இருக்கின்றது."

இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். 

கன்னியாவில் அமைதி வழியில் போராடிய தமிழ் மக்கள் மீது சிங்களவர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது "பிரச்சினைகளுக்குப் போராட்டம் என்ற பெயரில் அச்சுறுத்தல் விடுவிப்பதோ அல்லது வன்முறைகளில் இரு இனத்தவர்களும் - இரு மதத்தவர்களும் ஈடுபடுவதோ அழகல்ல. 

இந்த ஆட்சி இனக்கலவரத்துக்கும் மதத்கலவரத்துக்கும் தூபமிட்டுள்ளது. விரைவில் ஆட்சி மாற்றம் இடம்பெறும். பௌத்த தேரர்களின் பங்களிப்புடன் சிங்கள ஆட்சி விரைவில் மலரும். அந்த ஆட்சியில் சிங்கள, தமிழ், முஸ்லிம் என மூவின இனத்தவர்களும் ஒற்றுமையாக வாழும் நிலைமையை நாம் உருவாக்குவோம்" - என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad