வாழைச்சேனை முஸ்லிம் காங்கிரசின் கோட்டை என்பவர்கள்.! பிரதேசத்திற்கு எதனை செய்துள்ளார்கள்.? அதிபர் பரீட் காட்டம்..!! - News View

About Us

About Us

Breaking

Saturday, July 27, 2019

வாழைச்சேனை முஸ்லிம் காங்கிரசின் கோட்டை என்பவர்கள்.! பிரதேசத்திற்கு எதனை செய்துள்ளார்கள்.? அதிபர் பரீட் காட்டம்..!!

எப்பொழுது தேர்தல் காலங்கள் நெருங்குகின்றதோ அப்பொழுது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் செயற்பாட்டாளர்களும் வாழைச்சேனைக்குள் உட்புகுந்து மக்களை உசுப்பேத்தி, மக்களுடன் உணர்வுபூர்வாமக பேசிவிட்டு அடுத்த தேர்தல் வருகின்ற பொழுது மீண்டும் வாழைச்சேனைக்குள் வந்து மக்களை மீண்டும் ஏமாற்றி விட்டு செல்கின்றனர் என முன்னால் முஸ்லிம் காங்கிரசின் அதியுயர் பீட உறுப்பினரும், கல்குடாவிற்கான பாராளுமன்ற வேட்பாளரும், தற்போதைய வாழைச்சேனை ஆயிஷா பாலிகாவின் அதிபருமான எம்.டி.எம்.பரீட் தனது ஆதங்கத்தினை மேற்கண்டவாறு தெரிவிதுள்ளார்.

மேலும் தனது பகிரங்க காட்டத்தினை தெரிவித்த அதிபர் பரீட், வாழைச்சேனை பிரதேசத்து மக்கள் காலாகாலமாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காக வாக்களித்தாலும் தான் அதிபாராக கடைமையாற்றும் வாழைச்சேனை மக்களின் மிகப்பெரிய சொத்தாக கருதப்படும் ஆயிஷா பெண்கள் பாடசாலைக்கு ஒரு துளியேனும் இது வரை அபிவிருதிகளாக முஸ்லிம் காங்கிரசினை பிரதி நிதித்துவப்படுத்தும் அதன் தலைமையோ.! அல்லது ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களோ.! மேற்கொண்டதில்லை.

வாழைச்சேனை அந்/நூர் தேசிய கலவன் பாடசலையில் இருந்து தனியாக ஆயிஷா பெண்கள் பாடசாலையை பிரித்தெடுப்பதில் கல்குடாவின் அரசியல் தலைமையான முன்னால் அமைச்சர் அமீர் அலியுடன் இணைந்து தான் செயலாற்றிமையே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது. 

அதனாலே முஸ்லிம் காங்கிரசின் கோடையாக சொல்லும் வாழைச்சேனையில் அமைந்துள்ள தான் அதிபராக கடமையாற்றும் குறித்த ஆயிஷா பெண்கள் பாடசாலை முஸ்லிம் காங்கிரசின் அபிவிருத்திகளில் இருந்து புறக்கணிக்கப்படுவதாக தனது காட்டத்தினை இவ்வாறு தெளிவுபடுத்துகின்றார்.

மேலும்,வாழைச்சேனை பிரதேச மக்களின் நிலையான அபிவிருத்திகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எங்களுடைய அவாவாக இருந்து வருகின்றது. ஆகையால், பெரும்பாலான வாழைச்சேனை மக்கள் முஸ்லிம் காங்கிரசின் ஆதரவாளர்கள் என கூறுகின்றவர்களிடன் முஸ்லிம் காங்கிரசினால் வாழைசேனையில் எந்தவித அபிவிருதிகளையும் மேற்கொள்ளவில்லை என்பதனையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

தேர்தல் காலங்கள் வருகின்ற பொழுது வாழைச்சேனைக்கு வரும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் மக்களை உசுப்பேத்துவதுடன் கல்குடாவில் இரண்டுக்கு மேற்பட்ட வேட்பாளர்களை களமிறக்கி அவர்களுக்கு வாக்களிக்க சொல்லாமல் வெளியூர்களில் இருந்து திட்டமிட்டு களமிரகப்படுபவர்களின் வெற்றியை குறிகோள்ளாக வைத்தே திட்டங்களை வகுத்து விட்டு செல்கின்றனர்.

இதனை நான் 2008ம் ஆண்டைய கிழக்கு மாகாண சபை தேர்தலின் பொழுது கட்சியின் தலைமையிடமும், பசீர் சேகுதாவூத்திடமும் தெரிவித்திருந்தேன்.. ஆனால் அவர்கள் எனது ஆலோசனையினையும், கடுத்தினையும் ஏற்காமல் செற்பட்டு வாழைச்சேனை மக்களை ஏமாற்றியதினால் அத்தேர்தலில் பசீர் சேகுதாவூத்தும், அமீர் தீனும் ஏற்றாவூரில் வெற்றியடைந்தார்கள். 

இந்த நிலையே 2012ம் ஆண்டைய மாகாண சபை தேர்தலிலும் இடம் பெற்றது. திட்டமிட்டு கல்குடாவில் மூன்று வேட்பாளர்களை களமிறக்கிவிட்டு முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கு வாக்களிக்க கூறியதினால் கல்குடா மகக்ளும், வாழைச்சேனை மக்களும் ஏமாற்றப்பட்டார்கள்.

ஆனால் மறு பக்கத்திலே கல்குடாவின் அரசியல் தலைமையான அமீர் அலி தூர நோக்கு சிந்தனையுடன் 2008ம் ஆண்டைய தேர்தலை போன்று 2012 யிலும் தலா ஒரு வேட்பாளர் வீதம் ஏறாவூர், காத்தான்குடி, கல்குடா என களகிறக்கி மூன்று உறுப்பினர்களையும் வெற்றியடைய செய்திருந்தார்.

கல்குடாவில் இரண்டு அல்லது மூன்று வேட்பாளர்களை களமிறக்கி பிரதி நிதித்துவங்களை வேறு ஊர்களுக்கு கொடுப்பதே அவர்களுடைய மறைமுகமான திட்டங்களாக அன்ரு தொடக்கம் இன்று வரை இருந்து வருகின்றது. 

இதனை காலாலமாக முஸ்லிம் காங்கிரசின் கோட்டை என பெருமிதத்துடன் வாக்களித்து வரும் வாழைச்சேனை மக்கள் இனியாவது சிந்தித்து செயலாற்றுவதுடன் வாழைச்சேனை மக்களின் நீண்ட கால உரிமை பிரச்சனையாக பார்க்கப்படுகின்ற தனியான பிரதேச சபையினை யாரால் உண்மையில் பெற்றுக்கொடுக்க முடியும்.? என்பது சம்பந்தமாக தெரிவித்த அதிபர் பரீட்டினுடைய காட்டமான கருத்துக்களை இங்கே காணொளியாக பதிவேற்றப்பட்டுள்ளது.

Kuttiyan Irshad Ahmed

No comments:

Post a Comment