இளைஞனின் உயிரிழப்பு தொடர்பில் இரு விசேட குழுக்கள் விசாரணைகள் முன்னெடுப்பு - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, August 17, 2025

இளைஞனின் உயிரிழப்பு தொடர்பில் இரு விசேட குழுக்கள் விசாரணைகள் முன்னெடுப்பு - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு

(எம்.மனோசித்ரா)

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் இளைஞன் உயிரிழந்தமை தொடர்பில் ஆராய இரு விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ சிப்பாய்கள் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் எப்.யூ.வூட்லர் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (17) கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தின் இரு குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன. 13 இராணுவத்தினரிடமு, மேலும் 11 சிவில் நபர்களிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

இதுவரையில் 3 இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் கொள்ளையிடுவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலை மேற்கொண்டு காயப்படுத்திய குற்றச்சாட்டில் மற்றைய சிப்பாய் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

இம்மூவரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். முகாமுக்குள் உட்பிரவேசிக்க முயன்ற சிவில் பிரஜைகளிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே குறித்த இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறிருப்பினும் இதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment