உரித்துரிமைகளை ரத்து செய்வதற்கு எதிராக செயற்படவில்லை : அறிக்கை வௌியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 13, 2025

உரித்துரிமைகளை ரத்து செய்வதற்கு எதிராக செயற்படவில்லை : அறிக்கை வௌியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை ரத்துச் செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில் தாம், ஈடுபடவில்லையென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

உரித்துரிமைகளை ரத்துச் செய்வதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் அனுமதியுடனே இந்த மனு, தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும், இவ்விடயத்தில் சந்திரிக்காவும் தொடர்புற்றுள்ளதாக வெளியான செய்திகைளை மறுக்கும் வகையிலே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இவ்வாறு அறிவித்துள்ளார்.

இது பற்றி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றையும் வௌியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிறப்புரிமைகள் இரத்து செய்யப்படுவதற்கு எதிராக, முன்னாள் ஜனாதிபதிகளுடன் இணைந்து சந்திரிக்காவும் போராடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது உண்மைக்குப் புறம்பான தாகும். இதற்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கைகளையும் சந்திரிக்கா எடுக்கவில்லை. 

இதுவரைக்கும் இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகளுடன் சந்திரிக்கா அம்மையார் கலந்துரையாடக்கூடவில்லை. 

பொறுப்பற்ற வகையில் சில ஊடகங்கள் செய்தி வௌியிடுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment