அரசாங்க சேவையில் 62,314 பேரை இணைக்க அமைச்சரவை அனுமதி : எவரும் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 13, 2025

அரசாங்க சேவையில் 62,314 பேரை இணைக்க அமைச்சரவை அனுமதி : எவரும் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை

அரசாங்க சேவையில் புதிதாக 62,314 பேரை இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலே, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 

இதுபற்றிக் குறிப்பிட்ட அமைச்சர், அரசாங்க சேவையில் ஆட்களைச் சேர்க்கும் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும். எனவே எவரும் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை.

கடந்த எட்டு மாதங்களில் 62314 பேரை இணைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தொழிலின்றி உள்ளோருக்கு வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். எமது அரசாங்கம் கண்மூடித்தனமாக ஆட்சேர்ப்புச் செய்யாது. பொதுச் சேவையை திறம்பட நிர்வகிக்கும் திட்டத்துடனே ஆட்சேர்ப்புக்கள் இடம்பெறும்.

அரச சேவையில் ஆட்களைச் சேர்ப்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதற்கு பிரதமரின் செயலாளரின் தலைமையில், ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. தேவையான ஆளணிகள் குறித்து இக்குழுவுக்கே அமைச்சுக்கள் பரிந்துரைக்க வேண்டும்.

அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செய்ய அனுமதிக்கப்பட்ட 62,314 பேரில் பலர் ஏற்கனவே சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

வேறு சிலருக்கான தேர்வுகள் மற்றும் நேர்காணல்கள் நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு அமைச்சுக்கு 12,433 பேரை இணைத்துக் கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 4415 இராணுவ வீரர்களும் உள்ளடங்குவர். 

சுகாதாரத்துறையிலு ம் ஆட்சேர்ப்புக்கள் இடம்பெறவுள்ளன. இதற்கிணங்க 1408 மருத்துவ அதிகாரிகள், 3147 தாதியர் அதிகாரிகள், 976 குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள், 1000 உதவியாளர்கள் மற்றும் 1939 சுகாதார உதவியாளர்கள் உட்பட 11,889 பேரைச் சேர்ப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. 

இதேபோன்று 1000 தபால் உதவியாளர்கள், 1000 பதிவு செய்யப்பட்ட மாற்று அதிகாரிகள், 600 தபால் சேவை அதிகாரிகள் மற்றும் 378 துணை தபால் அதிகாரிகள் ஆகியோர் தபால் திணைக்களத்தில் இணைக் கப்பட்டுள்ளனர். 

தேவைக்கேற்ப கிட்டத்தட்ட அனைத்து அமைச்சகங்களிலும் ஆட்சேர்ப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment