இந்தோனேசியாவில் வெடித்த எரிமலை : மக்கள் வெளியேற்றம் : விமானம் பறக்க தடை - News View

About Us

About Us

Breaking

Monday, August 4, 2025

இந்தோனேசியாவில் வெடித்த எரிமலை : மக்கள் வெளியேற்றம் : விமானம் பறக்க தடை

இந்தோனேசியாவின் எரிமலைகளில் ஒன்றான மவுண்ட் லெவோடோபியிலுள்ள லக்கி லக்கி, தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றுமுன்தினம் (02) வெடித்து சிதறியது.

அதன் விளைவாக எரிமலையில் இருந்து வௌியாகிய தூசு துகளும் சாம்பலும் 18 கிலோ மீற்றர் வரை பரவியுள்ளது. அண்மித்த கிராமங்களை கழிவுப்பொருட்கள் மூடியுள்ளன.

இதேவேளை இந்த எரிமலையில் கடந்த வெள்ளியன்று மாலையில் ஏற்பட்ட வெடிப்பினால் 10 கிலோ மீற்றர் உயரத்திற்கு சாம்பல் பரவியிருந்தது.

இந்த இரண்டு வெடிப்புகளும் ஐந்து மணி நேரத்திற்கும் குறைவான நேர இடைவௌியில் இடம்பெற்றுள்ளன.

அதனால் அப்பகுதி ஊடாக விமானம் பறப்பதற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, பிரதேச மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

வெவோடோபி நகரில் உள்ள லிவோட்பி எரிமலை 1,500 மீற்றர் உயரமுள்ளது. இது லக்கி லக்கி என அறியப்படுகிறது. இந்த மலையின் அழகைக்காண வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கின்றனர்.

என்றாலும் இந்த எரிமலை சமீப காலமாக அடிக்கடி வெடித்துச் சிதறிவரும் சூழலில் பயங்கர சத்தத்துடனேயே இம்முறை வெடித்து சிதறியுள்ளது. இதனால் எரிமலையில் இருந்து சுமார் 20 கிலோ மீற்றர் உயரத்துக்கு தீக்குழம்பு வெளியேறியுள்ளது. 

அந்த இடம் முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது. எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் 8 கிலோ மீற்றர் தூரம் வரை ஆறாக ஓடியது.

எரிமலை அருகே உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டதோடு சுற்றுலா பயணிகளும் வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர். 

சி.என்.என்.

No comments:

Post a Comment