இஸ்ரேலை கண்டித்து கொழும்பில் பேரணி : பலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஒன்றிணையுமாறு அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, August 14, 2025

இஸ்ரேலை கண்டித்து கொழும்பில் பேரணி : பலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஒன்றிணையுமாறு அழைப்பு

பலஸ்­தீனில் இடம்­பெறும் இஸ்­ரேலின் இன அழிப்பை கண்­டித்தும் சுதந்­திர பலஸ்தீன் இராச்­சியம் ஒன்றை பிர­க­ட­னப்­ப­டுத்­து­மாறு சர்வதே­சத்­துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாளை வெள்ளிக்கி­ழமை ஏற்­பாடு செய்­துள்ள பேர­ணியில் இலங்கையர்களாக அனை­வரும் ஒன்­று­பட வேண்­டு­மென பலஸ்தீனுக்­காக ஒன்­றி­ணையும் இலங்­கை­யர்கள் அமைப்­பினர் கூட்டாக வலி­யு­றுத்­தினர்.

கொழும்பு மரு­தானை சி.எஸ்.ஆர். கேட்போர் கூடத்தில் நேற்று (14) இடம்பெற்ற ஊட­கங்­களை தெளி­வு­ப­டுத்தும் செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரிவித்தனர்.

அங்கு கருத்து தெரி­வித்த அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபையின் பொதுச் செய­லா­ளரும் சமூக செயற்­பாட்­டா­ள­ரு­மான மெள­லவி அர்கம் நூராமித், பலஸ்­தீ­னுக்கு ஆத­ர­வ­ளித்­து­வரும் அமைப்­புகள் ஒன்­றி­ணைந்து பலஸ்­தீ­னுக்­காக ஒன்­றி­ணையும் இலங்கை­யர்கள் என்ற பெயரில் நாளை வெள்­ளிக்­கி­ழமை இஸ்ரேலின் இனப்­ப­டு­கொ­லையை கண்­டித்து அமை­திப்­பே­ரணி ஒன்றை ஏற்­பாடு செய்­தி­ருக்­கி­றது.

பொரளை மயா­னத்­துக்கு அருகில் இருந்து மாலை 3 மணிக்கு பேரணி ஆரம்­பித்து கெம்பல் வாகன தரிப்­பிடம் வரை செல்­ல­வுள்­ளது. இந்த பேர­ணியில் இன, மத பேத­மின்றி இலங்­கை­யர்­க­ளா­கிய எமக்கும் இதயம் இருக்­கி­றது என்­ப­தனை உலகுக்கு காட்­டு­வ­தற்கு நாங்கள் அனை­வரும் இதில் கலந்து­கொள்ள வேண்டும்.

உலகில் மனித படு­கொ­லைகள் இடம்­பெ­று­வதை நேரடி ஒளி­ப­ரப்பு செய்­யப்­ப­டு­வது இதுவே முதல்­த­ட­வை­யாகும். இஸ்ரேல் எந்த சர்வதேச சட்­டத்­தையும் மதிக்­காமல் அங்கு இனப்­ப­டு­கொலை செய்து­வ­ரு­கி­றது. இது­வரை 18 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட குழந்­தைகள் கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றனர். உலகில் எவ­ருக்கு அநீதி ஏற்பட்டாலும் அதற்­காக நாங்கள் எங்­களால் முடிந்த வகையில் அதற்கு எதி­ராக குரல்­கொ­டுக்க வேண்டும். அதுதான் மனிதாபிமானமாகும். பலஸ்­தீனில் யுத்தம் இடம்­பெ­று­வ­தில்லை. அங்கு பாரிய அநி­யா­யமே இடம்­பெ­று­கி­றது.

தென்­னா­பி­ரிக்க கறுப்­பின மக்­களின் சுதந்­தி­ரத்­துக்­காக போராடி வெற்­றி­பெற்ற நெல்சன் மண்­டேலா, எமக்­கு­ரிய சுதந்­திரம் பலஸ்தீன் இராச்­சியம் சுதந்­தி­ர­ம­டைந்த பிற­காகும் எனக்கூறியதை நினைவுபடுத்துகிறேன்.

பலஸ்­தீனில் கடந்த இரண்டு மாதங்­க­ளாக அவர்­க­ளுக்­கான அத்தியாவ­சிய உண­வுப்­பொ­ருட்கள் தடை செய்­யப்­பட்­டுள்­ளன. அதனால் பலஸ்­தீனில் இடம்­பெ­று­வது யுத்­தத்­துக்கும் அப்பாலானதொரு விட­ய­மாகும். எனவே இந்த நாட்டில் வாழக்­கூ­டிய அனைத்­தின மக்­களும் அர­சி­ய­லுக்கு அப்பால், பலஸ்­தீன மக்களுக்காக குரல்­கொ­டுக்க ஒன்­றி­ணைய வேண்டும் என்றார்.

இங்கு கருத்து தெரி­வித்த, சமூக செயற்­பாட்­டாளர் லயனல் பீரிஸ், பலஸ்­தீனில் இடம்­பெற்­று­வரும் படு­கொ­லையை கண்­டித்து உலக நாடுகள் இஸ­்ரே­லுக்கு எதி­ராக பல தடை­களை விதித்து வருகின்றன. மக்கள் வீதிக்­கி­றங்கி போராட்­டங்­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். இலங்­கை­யர்க­ளா­கிய நாங்­களும் பலஸ்­தீ­னுக்கு ஆதரவ­ளித்து வரும் நாடு­க­ளுடன் ஒன்­றி­ணைந்து எமது ஆத­ரவை தெரி­விக்க வேண்டும். அதற்­காக 15ஆம் திகதி இன, மத பேத­மின்றி அனை­வரும் இந்த பேர­ணியில் கலந்­து­கொள்ள வேண்டும் என கேட்டுக்­ கொள்­கிறேன்.

அதே­நேரம் இஸ்­ரேலின் செயற்­பா­டுகள் எமது நாட்டில் அதிகரித்துள்ளன. தற்­போது இல­வச வீசா வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. இஸ்ரேல் மக்கள் சுற்­றுலா பய­ணி­க­ளாக எமது நாட்­டுக்கு வரு­வதில் எமக்கு எந்த பிரச்­சி­னையும் இல்லை.

ஆனால்­ இந்த இல­வச வீசா மூலம் பலஸ்­தீனில் படு­கொ­லை­களை செய்­து­வரும் இஸ்ரேல் இரா­ணு­வத்­தினர், தங்­களின் மன அமைதிக்கான இட­மாக இலங்­கையை மாற்­றிக்­கொண்­டுள்­ளனர். அவர்கள் இலங்­கையில் அறு­கம்பை போன்று பிர­தே­சங்­களில் சட்டவி­ரோத நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கி­ன்றனர். இஸ்ரேல் இரா­ணு­வத்­தினர் குறிப்­பிட்ட காலம் இலங்­கையில் தங்கி இருந்து, மீண்டும் இஸ்­ரே­லுக்கு சென்று படு­கொ­லை­களில் ஈடு­ப­டு­கின்­றனர். அதனால் இஸ்ரேல் இரா­ணு­வத்­துக்­கான அடைக்கலமாக இலங்கையை மாற்றிக்கொள்வதற்கு இடமளிக்கக்கூடாது என்றார்.

சுதந்திர பலஸ்தீன் அமைப்பின் ஏற்பாட்டாளர் ஹுசைன் ஷாமில், சமூக இளைஞர் குடும்ப அமைப்பாளர் எம்.இர்ஷாத் மற்றும் சிவில் அமைப்புகளைச் சேர்ந்த பலரும் இங்கு கலந்துகொண்டு, 15ஆம் திகதி இடம்பெறும் அமைதிப்பேரணியில் இலங்கையர்களாக நாங்கள் அனைவரும் கலந்துகொண்டு, பலஸ்தீன் மக்களுக்கான எமது ஆதரவை தெரிவிக்க முன்வரவேண்டும் என்றனர்.

Vidivelli

No comments:

Post a Comment