டிஜிட்டல் முறையில் விவசாயிகளுக்கான உரமானியம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 19, 2025

டிஜிட்டல் முறையில் விவசாயிகளுக்கான உரமானியம்

விவசாயிகளுக்கான உரமானியத்தை டிஜிட்டல் முறையில் நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (18) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு 13 தீர்மானங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசு விவசாயிகளுக்கு உரமானியத்தை வழங்கும்போது அந்தந்த விவசாயிகளுக்கு குறித்த மானியத்தை சரியான நேரத்தில் கிடைக்கின்றமையையும், குறித்த நிதியுதவியை தமது விவசாய நடவடிக்கைகளுக்கான உரத் தேவைக்காக முழுமையாகப் பயன்படுத்துகின்றமையை உறுதிப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதனால், குறித்த பின்னூட்டல் செயற்பாட்டுக்கு வசதியளித்து விவசாயிகளுக்கு உர விநியோகத்தை மிகவும் முறைசார்ந்த வகையிலும், வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்காக QR குறியீடு அல்லது பொருத்தமான முறையொன்றைப் பயன்படுத்த வேண்டியமை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, உரமானிய வேலைத்திட்டத்திற்குப் தகைமை பெறுகின்ற அனைத்து விவசாயிகளும் விவசாய விடயதான அமைச்சின் கீழ் பிரதேச செயலாளர்கள் மூலம் அடையாளங் காண்பதற்கும், அவ்வாறு தகைமை பெறுகின்ற விவசாயிகளுக்கு உரமானியத்தை வழங்குவதற்கும் QR முறைமை அல்லது பொருத்தமான டிஜிட்டல் பொறிமுறையை உருவாக்குவதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதியும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment