நல்லூர் திருவிழாவில் சங்கிலி அறுத்த யுவதி கைது : மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சாரணர்கள் - News View

About Us

About Us

Breaking

Friday, August 22, 2025

நல்லூர் திருவிழாவில் சங்கிலி அறுத்த யுவதி கைது : மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சாரணர்கள்

நல்லூர் தேர்திருவிழாவின்போது நகைகளை திருடிய இளம் யுவதி ஒருவரை ஆலய சூழலில் கடமையில் இருந்த சாரணர்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நல்லூர் ஆலய தேர் திருவிழா நேற்று (21) இடம்பெற்றது. அதன்போது இளம் யுவதி ஒருவர், பக்தர்களுக்கு இடையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியவேளை, அதனை அப்பகுதியில் இருந்த சாரணர்கள் அவதானித்து யுவதியை தொடர்ந்து அவதானித்துள்ளனர்.

அதன்போது குறித்த யுவதி ஒரு பெண்ணிடம் சங்கிலி அறுக்க முற்பட்டவேளை சாரணர்கள் மடக்கி பிடித்துள்ளனர்.

பின்னர் அப்பகுதியில் இருந்த பொலிஸாரிடம் யுவதி ஒப்படைக்கப்பட்ட நிலையில், பொலிஸார் யுவதியை அழைத்து சென்று சோதனை செய்தபோது அவரது உடைமையில் இருந்து 3 தங்க சங்கிலிகள் மீட்கப்பட்டுள்ளன.

அதனை அடுத்து யுவதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தவேளை, யுவதி கொச்சிக்கடை பகுதியை சேர்ந்த 24 வயதுடையவர் எனவும், அவருடன் மேலும் சில நபர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வந்திருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

அதன் அடிப்படையில் யுவதியுடன் வந்த ஏனையவர்கள் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

அத்துடன் யுவதியின் நடவடிக்கைகளை அவதானித்து, யுவதியை கையும் களவுமாக பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சாரணர்களுக்கும் பொலிஸார் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

அதேவேளை தேர் திருவிழாவின்போது, தமது தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளதாக 08 பேர் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment